சுவாமிஜியின் வாழ்விலே…

-செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம்,  ‘தினசரி’ என்ற இணையதளத்தின் ஆசிரியர்.  அவரது தொகுப்பு இது...

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில்  நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகள்:

 ஆண்டு
————-
1863
மாதம்  
————————-
ஜனவரி 12
நிகழ்வு 
———————————————————————————————————-
கொல்கத்தாவில் பிறப்பு. (மகர சங்க்ராந்தி நாள்)
1879பிரசிடென்ஸி கல்லூரியில் காலடி எடுத்து வைத்தார்.
1880ஜெனரல் அஸெம்பிளி இன்ஸ்டிட்யூஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
1881நவம்பர்ஸ்ரீ ராமகிருஷ்ணருடன் முதல் சந்திப்பு
1882-1886ஸ்ரீ ராமகிருஷ்ணருடனான தொடர்புகள்
1884பி.ஏ. தேர்ச்சி
தந்தையார் காலமாதல்
1885ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கடைசிக் காலம்/ உடல் நலம் குன்றியிருத்தல்
1886ஆகஸ்ட் 16ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பரிபூர்ண சமாதி
பராநகர் மடம் நிறுவுதல்
டிசம்பர் 24அனந்தபூரில் இயல்பான சந்நியாச வாழ்க்கையில் புகுதல்
1887ஜனவரிபராநகர் மடத்தில் முழு சந்நியாச வாழ்க்கை தொடங்குதல்
1890-1893வேதாந்த சந்நியாசியாக இந்தியா முழுதும் பயணம்
1892டிசம்பர் 24தென் இந்தியாவில் உள்ள கன்னியாகுமரியில் தவம்.
1893பிப்ரவரி 13 தென்னிந்தியாவில் உள்ள செகந்திராபாத்தில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் உபந்நியாசம்
மே 31மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பயணமாதல்
ஜூலை 25கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் இறங்குதல்
ஜூலை 30சிகாகோ சென்றடைதல்
ஆகஸ்ட்ஹார்வர்ட் பல்கலை.யின் பேராசிரியர் ஜான் ரைட்டுடன் சந்திப்பு
செப்டம்பர் 11சிகாகோவில் சர்வ மத சபையில் முதல் பேச்சு
செப்டம்பர் 27சர்வமத சபையில் நிறைவு உரை
நவம்பர் 20மத்திய – மேற்கு உலக நாடுகளில் உரையாற்ற தொடர் பயணம்.
1894ஏப்ரல் 14கிழக்குக் கரை நகரங்களில் உரைகள், வகுப்புகள் தொடக்கம்
மே 16ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச்சு
ஜூலை- ஆகஸ்ட்கிரீன் ஏகர் மத மாநாட்டில் பங்கேற்பு
நவம்பர்நியூ யார்க்கில் வேதாந்த சங்கம் தொடங்குதல்.
1895ஜனவரிநியூ யார்க்கில் சமய வகுப்புகள் தொடங்குதல்
ஜூன் 4-18நியூ ஹாம்ப்ஷைர்- பெர்ஸியில் முகாம்.
ஜூன் -ஆகஸ்ட்நியூ யார்க், புனித லாரன்ஸ் ஆயிரம் தீவு பூங்கா பகுதியில் தங்குதல்
ஆகஸ்ட் – செப்டம்பர்பாரீஸ் நகரில்
அக்டோபர் – நவம்பர்லண்டனில் பேருரைகள் நிகழ்த்துதல்
டிசம்பர் 6நியூயார்க்குக்கு பயணமாதல்..
1896மார்ச் 22-25ஹார்வர்ட் பல்கலையில் உரைகள், கிழக்கத்திய நாடுகள் தத்துவ இருக்கை அளித்தல்
ஏப்ரல் 15லண்டனுக்கு திரும்புதல்
மே- ஜூலைலண்டனில் வகுப்புகள் நடத்துதல்
மே 28ஆக்ஸ்போர்டில் மாக்ஸ்முல்லரை சந்தித்தல்
ஆகஸ்ட் – செப்டம்பர்ஐரோப்பாவில் ஆறு வாரங்கள்
அக்டோபர் – நவம்பர்லண்டனில் வகுப்புகள் நடத்துதல்
டிசம்பர் 30இந்தியாவுக்கு புறப்படுதல்..
1897ஜனவரி 15இலங்கை – கொழும்புவில் வந்து இறங்குதல்
பிப்ரவரி 6-15சென்னையில் தங்குதல்
பிப்ரவரி 19கொல்கத்தாவுக்கு வருகை
மே 1கொல்கத்தாவில் ராமகிருஷ்ண மிஷன் அமைப்பை நிறுவுதல்
மே – டிசம்பர்வடமேற்கு இந்தியாவில் பயணம் …
1898ஜனவரிகொல்கத்தா திரும்புதல்
மேமேற்கத்திய அன்பர்களுடன் வட இந்தியாவில் புனிதப் பயணம் மேற்கொள்ளல்
ஆகஸ்ட் 2காஷ்மீர், அமர்நாத்தில்
டிசம்பர் 9பேலூர் மடம் புனிதத்துவத்துடன் எழுதல் /(கும்பாபிஷேகம்) .
1899மார்ச் 19மாயாவதியில் அத்வைத ஆஸ்ரமம் தொடங்குதல்
ஜூன் 20மேற்கு உலகு நாடுகளுக்கு மீண்டும் ஓர் பயணமாக இந்தியாவில் இருந்து புறப்பாடு
ஜூலை 31லண்டன் வருகை
ஆகஸ்ட் 28நியூ யார்க் நகருக்கு வருகை
ஆகஸ்ட் – நவம்பர்நியூ யார்க்கில் ரிட்ஜ்லி மேனரில் தங்குதல்
டிசம்பர் 3லாஸ் ஏஞ்சல்ஸ் வருகை .
1900பிப்ரவரி 22சான் பிரான்சிஸ்கோ வருகை
ஏப்ரல் 14சான்பிரான்சிஸ்கோவில் வேதாந்த சங்கம் அமைத்தல்
ஜூன்நியூ யார்க் நகரில் வேதாந்த வகுப்புகள் நிறைவாக நடத்துதல்
ஜூலை 26ஐரோப்பாவுக்கு பயணமாதல்
ஆகஸ்ட் 3சர்வதேச  மாநாட்டுக்காக பாரீஸ் நகருக்கு வருதல்
செப்டம்பர் 7சர்வதேச மாநாட்டில் மதங்களின் வரலாறு தொடர்பான உரை
அக்டோபர் 24வியன்னா, கான்ஸ்டாண்டிநோபிள், கிரீஸ், கெய்ரோ ஆகிய நாடுகளுக்கு பயணம்
நவம்பர் 26இந்தியாவுக்குத் திரும்புதல்
டிசம்பர் 9பேலூர் மடத்துக்கு வருகை .
1901ஜனவரிமாயாவதிக்கு வருகை
மார்ச் – மேஅஸ்ஸாம், கிழக்கு வங்காளத்துக்கு புனிதப் பயணம் .
1902ஜனவரி – பிப்ரவரிவாரணாசி, புத்தகயாவில் புனிதப் பயணம்
மார்ச்பேலூர் மடத்துக்கு திரும்புதல்
ஜூலை 4மஹா சமாதி

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s