இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -3

அனைத்துப் பண்பாட்டிற்கும்  தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.