கவலைகள் பலவிதம்

வ.உ.சி. சிறை புகுந்த போது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19.  இரு மகன்கள், வயதான மாமனார், மாமியார் அண்ணனுக்கு சிறைத் தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிப் பித்தரான கொழுந்தன்.  தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொதுநலன்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் வழங்கிய கொடையில் கர்ணனுக்குச் சமமான கீர்த்தி பெற்ற வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது....

ரிஷிகள் கடன்

இந்தியக் கல்வி முறையின் தொன்மை குறித்து எஸ்.கே.தத்தர் என்ற அறிஞர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை சுதேசமித்திரனில் செய்தியாக்கி மகிழ்கிறார் மகாகவி பாரதி. எனினும் அவரது உரையில் உள்ள முரணையும் இறுதியில் சுட்டிக்காட்டுகிறார்...