பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து.
Month: March 2023
பிச்சை புகினும் கற்கை நன்றே!
கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.
விவேகானந்தரின் வீரத்தாய்
பூஜ்யஸ்ரீ சுவாமி ததாகதானந்தர் (1923- 2016), ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வேதாந்த சொஸைட்டியின் நிர்வாகியாக இருந்தவர். ராமகிருஷ்ணர், அன்னை சாரதை, சுவாமி விவேகானந்தர் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் அன்னை குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...
ராமன்… எத்தனை ராமனடி?
இங்கே திரைப்பாடலில் ராமனை எப்படி வர்ணிக்கிறார் கவியரசர் என்று பாருங்கள். இதுதான், நாட்டின் நாடியுணர்ந்த எழுத்தாளனின் கடமை. திரைக்கலையும் பண்பாட்டுப் பெருவெளியுடன் உறவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கவிஞரின் தாபம் இப்பாடலில் இழையோடுகிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: லட்சுமி கல்யாணம்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 4)
...பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்....
அன்பும் ஆற்றலும் பரவட்டும்!
‘அகில பாரத சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழாக்குழு’வின் தலைவராக இருந்த பூஜ்யஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி, ஜெயந்தி கொண்டாட்டத் துவக்க விழாவில் (புதுதில்லி- ஜனவரி 11, 2013) ஆற்றிய அருளுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவமே இக்கட்டுரை....
பாரதியின் தவம்
எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 3)
ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய் என்று கடவுள் சொல்லுகிறார்.
அகமும் புறமும்- 3ஆ
தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின்தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.
பகவத்கீதை- மொழிபெயர்ப்பு (முன்னுரை-2)
எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ...
தெய்விகமானவன்தான் மனிதன்!
தேனி, ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனரான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...
பகவத் கீதை – மொழிபெயர்ப்பு (முன்னுரை 1)
மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மிக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத்கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர் ஆகியோருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. இவர்கள் அனைவரும் கீதைக்கு உரை எழுதினர். மகாகவி பாரதியும் இதில் விதிவிலக்கல்ல. மகாகவி பாரதி 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். 1924 -25 காலகட்டத்தில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களை பாரதி பிரசுராலயத்தார் முதன்முதலில் பதிப்பித்தனர். தனது முன்னுரையைத் தொடர்ந்து, பகவத் கீதை சுலோகங்கள் அனைத்தையும் நேரடி மொழிபெயர்ப்பில் 18 அத்தியாயங்களாக மகாகவி பாரதி வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் இங்கே...
நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்
1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்....
எனது நினைவுகள்
சுய மரியாதையை தமிழருக்குக் கற்றுக் கொடுத்தவர் என்று தமிழகத்தில் ஒரு பெரியவரை வியந்தோதும் கூட்டம் இன்றும் உண்டு. அந்தப் பெரியவருக்கே சுய மரியாதை என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் குறிப்பிடத் தக்க அரசியலாளருமான திரு. கோவை அ.அய்யாமுத்து. அவரது சுயசரிதையான ‘எனது நினைவுகள்’ முக்கியமான சமகால அரசியல் வரலாறு நூல். இதோ அந்நூலில் இருந்து, அவரது நினைவுகள் இங்கே வரலாற்று ஆவணமாக...
தர்மம்
நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் அமரர் க.நா.சுப்ரமணியம் (1912- 1988). தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கைத் தீர்மானித்த ஆளுமைகளில் முதன்மையானவர். இதனை தனது இடையறாத, சுயநலமற்ற இலக்கியப் பணிகளால் அவர் சாதித்தார். தமிழ் காத்த நல்லோரான அவர் 1944-இல் எழுதிய ‘சிறு’ சிறுகதை இது. சிறுகதை என்பது, சமூகத்துக்கு நீட்டி முழக்கும் உபதேசமாக அல்ல, போகிற போக்கில் வருடிச் செல்லும் தென்றல் போல இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...