சத்திய சோதனை- 2(1-5)

 குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபட வேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை....

பாரதியின் ஞானப் பாடல்- 1

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் முதலாவது கவிதை இது. ஞானயோகத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக இவை விளங்குவதால் தனியே தொகுக்கப்பட்டுள்ளன...

எனது முற்றத்தில் – 6

பார்த்துப் பார்த்து பிள்ளைகளுக்கு பெற்றோர் பெயர் சூட்டுகிறார்கள். தாத்தாவின் பெயர்  தாங்குகிற பேரனுக்குப்  பெயரன்  என்பதே சரியான பெயராம். மரியாதையால் தாத்தா பெயர் சொல்வதைத் தவிர்த்து, பெயர் சொல்லி அழைப்பதற்காகவே  குழந்தைகளுக்கு செல்லப் பெயர் சூட்டுகிறார்கள்.  மக்கள் பெயர் வைப்பதில் வீட்டு அளவு காரணம் மட்டுமல்ல, நாட்டு அளவு காரணமும்  பெரும் பங்கு வகிக்கிறது.....

வெறும் வேடிக்கை

ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். ....

இலக்கிய தீபம்- 8

நமது தேச சரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதையுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன்முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்த வேண்டியனவாகவே உள்ளன. ....

சிவகளிப் பேரலை- 21

மனக்குரங்கை சிவபெருமான் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் சிவபெருமான் தங்குகிற கூடாரமாக, மாளிகையாக மாறிவிடும். அந்த மாளிகை எப்படி இருக்கும்? சிவபெருமான் காமனைப் பொசுக்கியவன், அழித்தவன். (காம + அரி = காமாரி). ஆகையால், அவனிருக்கும் இடத்தில் தீயாசைகளுக்கு இடமில்லை.

பிரம்ம ராக்ஷஸ்

-புதுமைப்பித்தன்      நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.      அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்

ஆசாரத் திருத்த மஹாசபை

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன்....

சிவகளிப் பேரலை- 20

“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.

பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள்- 2

தமிழின் முன்னோடி இதழாளரான மகாகவி பாரதி, பத்திரிகைத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர். ஆங்கில பத்திரிகையை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்காகவே ஒரு பத்திரிகையை நடத்தியவர் என்பது கீழ்க்கண்ட விளம்பரத்திலிருந்து தெரிகிறது. பாரதி ஆசிரியராக இருந்த ‘விஜயா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் இது (கீழே...).

சிவகளிப் பேரலை- 19

இந்தப் பிறவியானது எப்படி இருக்கிறது? தீய ஆசைகள் சூழ்ந்ததாக இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக தீயோர்களை அண்டி நின்று அவர்களுக்காகப் பணியாற்றுவதாய் இருக்கிறது. இதன் காரணமாக நமக்குத் தீய முடிவைத் தருவதாகவும், கெட்ட பழியை ஏற்படுத்துவதாகவும் மிகுந்த துன்பமயமாகவும் பிறவிச்சுழல் அமைந்துவிடுகிறது. நமது வினைகளால் நமக்கு ஏற்படும் இந்த அனுபவங்களைத்தான் விதி என்றும், பிரம்மன் எழுதிய தலையெழுத்து என்றும் கூறுகிறோம். ....

பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள் – 1

மகாகவி பாரதி தான் பணியாற்றிய / நடத்திய பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகள் அவரது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துபவை. அவற்றில் மூன்று அறிவிப்புகள் இங்கே...

சிவகளிப் பேரலை- 18

வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். ....

காற்றிடைச் சாளரம் – 7

நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.

நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.

நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.

 நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.

... மேலும்... மேலும்...

சிவகளிப் பேரலை- 17

இறைவனது திருவடி தரிசனம், எல்லாவித பாவங்களையும் போக்கி நம்மை உய்விக்க வல்லது. இதைத்தான் திருவள்ளுவர்,  “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது”  என்கிறார். எங்கும் நிறைந்திருக்கக்கூடிய இறைவனின் திருவடி தரிசனம், புண்ணியத்தின் பலன் காரணமாகவோ அல்லது, இறைவனது பெருங்கருணையாகிய பேறு காரணமாகவோ, பக்தனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அவ்விதம் சிவபெருமானே, எனக்கு நீ தரிசனம் கொடுத்தாலும்கூட, எனது பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தோணி போன்ற உனது திருவடிகளை என்னால் காண இயலுமா?