சிறு வயதில் வறுமை காரணமாக படிக்கும் வாய்ப்பை இழந்த சிறுவன் தையல் கற்றுக்கொண்டு கிராமத்தில் தையல் கடை வைத்தார். தனது முயற்சியாலும் உழைப்பாலும் தற்போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுள் ஒருவராகி இருக்கும் கே.ஜி.கணேஷ் தான் அவர். நம்மைச் சிலிர்க்கச் செய்யும் அவரது வாழ்வனுபவம் இது…
Tag: தொழில்துறை
நட்பும் நம்பிக்கையும் வெல்லும்!
வெவ்வேறு பின்னணியில் இருந்து தொழில்நகரான திருப்பூருக்கு வந்த மூன்று நண்பர்கள் இணைந்து ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி வென்ற கதை இது. கல்வி அவர்களை இணைத்தது; தொழில் அவர்களைப் பிணைத்தது. இன்று திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களில் முதல் ஐம்பதில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்கள்….
தவறுக்குப் பொறுப்பேற்றால் தரணி ஆளலாம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா.எம்.சண்முகம், ஐ.ஏ.எஸ்.அதிகாரியாகி இருக்க வேண்டியவர். காலம் இவரை திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளராக்கி இருக்கிறது. தொழில்துறைக்கு வழிகாட்டியாக விளங்கும் இவர், “தவறுகளுக்கு பிறரைக் குறை கூறாமல் பொறுப்பேற்கும்போதுதான், உன்னால் கற்கவும் முன்னேறவும் முடியும்” என்கிறார். அவருடனான சந்திப்பிலிருந்து…
திருப்பூர் பனியன் துறையில் ஒரு முன்னோடி!
1969இல் ஒரு தொழிலாளியுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம், இன்று ஆலமரமாய் வளர்ந்து, பின்னலாடையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் கொண்டதாக, பல ஆயிரம் தொழிலாளரின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. தொழில் நகரம் திருப்பூரின் முன்னோடியான ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ், இன்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையங்களுடன், ஆண்டுக்கு ரூ. 600 கோடி விற்றுமுதல் கொண்ட தொழில் குழுமம். இதன் நிறுவனரும் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் இ.பழனிசாமி, தனது தொழில் பயணத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்…
கட்டுமானத் துறையில் புரட்சி செய்யும் டீமேஜ் ப்ரிகாஸ்ட்!
தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தமிழகத்தின் முன்னோடி ஜவுளி நிறுவனங்களில் ஒன்று. அதன் துணை நிறுவனம் ’டீமேஜ் ப்ரிகாஸ்ட்’. வழக்கமான கட்டுமானப் பணியில் ஆறு மாதங்களில் கட்டும் கட்டடத்தை மூன்றே மாதங்களில் உருவாக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். கட்டடத்திற்குத் தேவையான தூண்கள், பாளங்கள், சுவர்கள், படிகள், ஆகியவற்றை அச்சில் வார்த்து (ரெடிமேட்) அவற்றை ஒருங்கிணைக்கும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய கட்டுமானங்களுக்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் முடிக்கக் கூடியதாகவும் உள்லது. இந்தத் தொழில்நுட்பத்தை நமது நாட்டில் பிரபலப்படுத்தியுள்ள நிறுவனம் டீமேஜ் ப்ரிகாஸ்ட். இதன் நிறுவனர் என்.கே.நந்தகோபால். அவருடனான உரையாடலிலிருந்து…
நேர்மையும் தரமுமே எங்கள் பிராண்ட்!
கிளாஸிக் போலோ - இந்திய ஜவுளித் துறையின் முக்கியமான பிராண்ட்களில் ஒன்று. 12 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள், இந்தியாவின் வர்த்தக அடையாளமாக பெருமிதம் அளிக்கின்றன. திருப்பூரில் செயல்படும் ராயல் கிளாஸிக் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பல பிராண்ட்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம். தனது நிறுவனம் வளர்ந்த கதையையும், தங்கள் சமூகப் பங்களிப்புகளையும் இங்கே நம்மிடம் விவரிக்கிறார்…
வேட்டிக்கு ஒரு சல்யூட்!
இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு வர்த்தக அடையாளத்தையும் உயர் மரியாதையையும் ஏற்படுத்தியதில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது. “தொழிலில் நேர்மை, தயாரிப்பில் தர மேலாண்மை, சக மனிதர்கள் மீது அன்பு - இவை இருந்தால், உள்ளத்தில் தெளிவிருந்தால், உங்கள் ஈடுபாடே சிகரத்துக்கு உயர்த்தும்” என்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன். கைராட்டை முதல் காற்றாலை வரை வெற்றிக்கொடி நாட்டிய அவரது அனுபவங்கள் இங்கே….
புதிய இந்தியாவின் பணிக் கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும்?
ஊழியர்களின் பணிநேரம் எவ்வளவு இருக்க வேண்டும்? இதுகுறித்து எந்த பிரதான செய்தித்தாளிலும் செய்தியோ, கட்டுரைகளோ வந்ததாகத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது ‘பொருள் புதிது’ இணையதளம். பாரதீய மஸ்தூர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்த திரு. திருநின்றவூர் ரவிகுமார், ஒரு தொழிலாளரின் பார்வையில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார்…
ஸ்டார் லிங்க்கை அல்ல, எலான் மஸ்க்கைத் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்!
அமெரிக்காவைச் சார்ந்த ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், செயற்கைக்கொள் அலைவரிசை உரிமத்திற்காக இந்தியாவில் காத்திருக்கிறார். ஆனால், அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மறுக்கிறார். மாறாக, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, தொழில் விவகாரத்தை வேறு எல்லைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார். அவருக்கு 'ஃபியூச்சர் ஈஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் திரு செமு பட் பொருத்தமான பதிலடி அளித்திருக்கிறார்...
பொறுமையாக இரு எலான் மஸ்க்!
அமெரிக்காவைச் சார்ந்த ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், செயற்கைக்கொள் அலைவரிசை உரிமத்திற்காக இந்தியாவில் காத்திருக்கிறார். ஆனால், அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மறுக்கிறார். மாறாக, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, தொழில் விவகாரத்தை வேறு எல்லைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார். அவருக்கு பாஜக முன்னணி தலைவர் திரு. ராஜீவ் சந்திரசேகர் சரியான பதிலடி அளித்திருக்கிறார்...
ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம்: மக்கள் மீது நம்பிக்கை
2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.