இன்குலாப் ஜிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

-கவியரசு கண்ணதாசன்

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, தேசபக்தி மிளிரும் கவியரசரின் அற்புதமான திரைப்படக் கவிதை இங்கு வெளியாகிறது....

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத் (குழு)

பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை! (2 முறை)
தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை
காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை!

இமயத்தில் வடஎல்லை,
குமரியின் தென்எல்லை!
வீட்டிற்கு ஒரு பிள்ளை,
அடிமைகள் இனி இல்லை! (2 முறை)

எங்கள் பொன் நாடு,
எந்நாளும் எம்மோடு!
கொள்ளை செய்வோரை
பழி செய்வோம் கூண்டோடு!

இன்குலாப் சிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெற வேண்டும்,
ஆர்பாட்ட அலை ஓசை வர வேண்டும்!
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்!

பகைவரை விடமாட்டோம்,
வலைதனில் விழமாட்டோம்!
உரிமையைத் தரமாட்டோம்,
விடுதலை விதை போட்டோம்! (2 முறை)

தாயின் கண்ணீரே
வழிகாட்டும் புதுவெள்ளம்!
நாய்கள் வெளியேற
வழி சொல்லும் அவள் உள்ளம்!

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

இந்நாட்டை ஆளுகின்ற திருடர்கள் ஒழியாமல்
தேசீய நெஞ்சங்கள் ஓயாது!
முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலும்
நான் கொண்ட எண்ணங்கள் மாறாது!

துணிந்திடும் மனம் கொண்டு
சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு
தலைவனின் கொடி உண்டு! (2 முறை)

இங்கே ஒரு காந்தி இருக்கிறான்,  அவன் வாழ்க!
தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க!

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை!
தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை!

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

இன்குலாப் சிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத் (குழு – 3 முறை)

திரைப்படம்: ராஜபார்ட் ரங்கதுரை (1973) 
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடகர்: டி.எம்.சௌந்தர்ராஜன்

Leave a comment