தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஓர் அழைப்பிதழ்…
நமது ‘பொருள் புதிது’ இணையதளத்தில் வெளியான இரு தொடர்கள் நூல் வடிவம் பெற்று, விஜயதசமி அன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளை அமைப்பினர் விஜயதசமியன்று (24.10.2023) சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது...
நவராத்திரி – 2
பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.
என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்
சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது....
நவராத்திரி – 1
இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: பதிப்புரையும் அணிந்துரையும்
நமது தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக உள்ளது. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரை, அணிந்துரைகள் இங்கே...
மஹாலக்ஷ்மி
"இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழ வேண்டும். மணமாலையே பாம்பாக வந்து விழுந்த போதிலும் மனம் பதறக் கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடு பெறுவர், துறவறத்துக்கும் இதுவே வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்"
அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்
1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான சுதந்திர இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.
இனி
கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
என்றும் வாழும் சநாதன தர்மம்- பதிப்புரையும் முன்னுரையும்
நமது தளத்தில் ‘சநாதனம்’ குறித்து தொடராக (வாழும் சனாதனம்) வெளியான அறிஞர்கள் பலரது கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட 37 கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரையும், முன்னுரையும் இங்கே…
யாரைத் தொழுவது?
பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.
பிராமணன் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து
போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆக மாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆக மாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆக மாட்டான். கைத்தொழில்களை யெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆக மாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார்.
மிருகங்களைச் சீர்திருத்தல்
"சீமையில் சில குரங்குகளை சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி, கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து, ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக் கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப் படுத்தும்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கி மனிதன் பிழைத்திருக்கிறான். ..."
சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதத்தின் பரிமாணங்கள்
அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவஇயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...
தொன்மையான பண்பாடே சனாதனம்!
சனாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்பிரமணியம் எழுதிய கட்டுரை இது...