வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்

இந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய விவாதம் தொடங்கியது. விளைவாக 2010இல் ஐ.நா.சபையில் வறுமைக் கோட்டை அளவிட புதிய,  பல பரிமாணங்களைக் கொண்ட வறுமை கணக்கீட்டு முறை (Multi Dimensional Poverty Index) அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் உரையில் இந்த புதிய கணக்கெடுப்பின்படி சுமார் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (Below Poverty Line- BPL) வெளியே வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நாடகக் கலை -1 ஆ

தமிழ் நாடக உலகம்  ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ என சங்கரதாஸ் சுவாமிகளையும்,  ‘தமிழ் நாடகத் தந்தை’ என  ‘பத்ம பூஷணம்’  பம்மல் சம்பந்தனாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது.

நாடகக் கலை -1 (அ)

தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.

சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும்

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர்,  அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…

நந்தனார் சரிதம் – 6

எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத்  தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.

நந்தனார் சரிதம் – 5

அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற  பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை!  உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!

நந்தனார் சரிதம் – 4

“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”

நந்தனார் சரிதம் – 3

“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”

நந்தனார் சரிதம் – 2

“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.” “ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”

நந்தனார் சரிதம் – 1

திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…

நாடகக் கலை – காணிக்கை

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...

நாடகக் கலை – அணிந்துரையும் முன்னுரையும்

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...

அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

நிர்வாக மேலாண்மைத் திறனும் செயலின்மையும்…

பகவத் கீதை - நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...

ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்

ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.