அதிகனின் கையில் வேல்; காலில் கழல்; உடம்பிலே வேர்வை; அவன் கழுத்திலே பச்சைப்புண். அவன் தலையிலே பனைமாலை; போர் செய்ய அணிந்த வெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போல இன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்க வில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை. வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஒளவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.... கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 7வது அத்தியாயம்)...
காற்றிடைச் சாளரம் -2
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் பிறந்த போதே தொப்புள் தழும்பு போல ஒட்டிக்கொண்டது காலம். . துயிலெழவும் துயில்கொள்ளவும் உணவுண்ணவும் கழிவு நீக்கவும் கற்றறியவும் கலை புரியவும் என ஒவ்வொன்றுக்கும் உடனிருந்தது காலம். . காலம் பார்த்து கல்வி காலம் பார்த்து காரியம் காலம் பார்த்து உணவு காலம் பார்த்து உறவு காலம் பார்த்து பிரிவு கலவியிலும் நுழையும் காலம். காலம்... காலம்... காலம். . பரமனின் கரத்திலொட்டிய பிரம்மனின் கபாலமாய் மனதிலொட்டிய காலத்தை சுமந்தலைகிறது வாழ்வு. . வேறு … Continue reading காற்றிடைச் சாளரம் -2
பாரதியின் நாட்டுக் கல்வி
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு; பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் 10வது பாடல் இது...
அழகிய போராட்டம் (பகுதி- 8)
ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே. சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம் 4-இன் நிறைவுப் பகுதி)....
அதிகமான் நெடுமான் அஞ்சி-6
“இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை. பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ முனை முறிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.கைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்...” (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 6ஆம் அத்தியாயம்)....
பாரதியின் தொழிலாளர் பாடல்கள்
மகாகவி பாரதி தொழிலாளர் நலம் குறித்து எழுதியுள்ள இரு கவிதைகள் இவை. இவற்றில் மறவன் பாட்டில் பல வரிகள் சிதிலமடைந்ததால் கிடைக்கவில்லை. பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் 8, 9 பாடல்கள் இவை....
அழகிய போராட்டம் (பகுதி- 7)
தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ....“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது. (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் 4வது அத்தியாயத்தின் துவக்கப் பகுதி)...
அதிகமான் நெடுமான் அஞ்சி-5
ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்டை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழிகாட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை ‘ஆற்றுப்படை’ என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழிகாட்டுவதானால் அதற்குப் ‘புலவராற்றுப்படை’ என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது ‘கூத்தராற்றுப்படை’ என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதை ‘பாணாற்றுப்படை’யென்றும், விறலிக்கு வழி காட்டுவதை ‘விறலியாற்றுப்படை’யென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும். (கி.வா.ஜ.வின் அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 5ஆம் அத்தியாயம்)...
பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்
மகாவி பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள் மிக சிறப்பானவை. பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள 4 முதல் 7 வரையிலான கவிதைகள் இவை....
அழகிய போராட்டம் (பகுதி- 6)
பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும் போராட்டங்கள் எல்லாம் 1920- 1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் மூன்றாவது அத்தியாயம்...)
பாரதியின் ‘முரசு’ பாடல்
மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள மூன்றாவது கவிதை இது....
அதிகமான் நெடுமான் அஞ்சி-4
அதுமுதல் ஒளவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ஒளவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, ”அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்" என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவுகூர்ந்து வருகிறதற்குக் காரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று; பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே. (கி.வா.ஜ. எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 4வது அத்தியாயம்)...
அழகிய போராட்டம் (பகுதி- 5)
“30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம்- 2இன் தொடர்ச்சி)....
வள்ளுவரின் அறமும் தீனதயாளரின் தர்மமும்
பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் ’ஒருங்கிணைந்த மனிதநேயம்’ கூறுகின்ற தர்மம் குறித்த சிந்தனைகளையும், அரசு குறித்த பார்வைகளையும், அதற்கு முன்னதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் அறச் சிந்தனைகளோடு ஒப்பிட்டால், ஒரே சிந்தனைப் போக்கைக் காண முடிகிறது....இவ்விருவரும் வலியுறுத்துவது ஒன்றே. அறம் எனினும் தர்மம் எனினும் அவை எம்மக்களாலும் எம்மதத்தாலும் எல்லா நேரங்களிலும் போற்றப்பட வேண்டும். அத்தகைய அறம், தர்ம வழி நடக்கும் அரசனே, அரசே நிலைப்பேறுடையதாக இருக்கும்.... (பேரா.பூ.தர்மலிங்கத்தின் கட்டுரை)...
அழகிய போராட்டம் (பகுதி- 4)
பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784 வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்) இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை. தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப் பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858 வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. ... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் துவக்கப் பகுதியில் இருந்து)....