-மகாகவி பாரதி
1.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிகையில் தாம் எழுதிய ‘முதற்பிரயத்தனம்’ என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.அதுவே இக்கவிதை...

தாதையர் குருதியில் சாய்ந்துதாம் மடியினும்
பின்வழி மக்கள் பேணுமாறு அளிக்கும்
சுதந்திரப் பெரும்போர் ஓர்கால் தொடங்குமேல்
பன்முறை தோற்கும் பான்மைத் தாயினும்
இறுதியின் வெற்றியோடு இலகுதல் திண்ணம்.
$$$