-க்ருஷ்ண.ஜகந்நாதன்
திரு க்ருஷ்ண.ஜகந்நாதன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஊழியர்களுள் ஒருவர். அதன் முழுநேர ஊழியராகவும் வித்யாபாரதி அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர். தற்போது ‘தர்ம ரக்ஷண சமிதி’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது பாடல் இது…

முடியும் உன்னால் முடியும் என்ற மந்திரம்,
மா முனிவர் விவேகாநந்தரின் வேத மந்திரம்!
விழித்திடுவாய் பாரதீயனே!
இலக்கு நோக்கி
நடை பயில்வாய் நின்றிடாமலே!
மண்ணில் விண்ணைக் காண முடியுமா? – நம்
மனதை வெற்றி கொள்ள முடியுமா?
கண்ணில் கடவுள் காட்சி தெரியுமா? நாம்
எண்ணும் எண்ணம் வெற்றி கொள்ளுமா?
நல்லவர்கள் சக்தி கூடுமா?- அந்த
வல்லமை தான் வழி நடத்துமா?
இல்லை என்பதில்லையாகுமா? -இந்த
தேசம் வையத் தலைமை கொள்ளுமா?
மனிதனுக்குள் புதைந்து நின்றிடும் – தெய்வ
சக்தியைத் தான் தூண்டிட வேண்டும்.
தியாகம், தொண்டு கொண்டு நம் வாழ்வில்
தூய சேவை செய்திட வேண்டும்.
தொட்டுவிடும் தூரம் வானந்தான் – தொடும்
முயற்சி என்றும் நின்றிட வேண்டாம்.
விட்டிடாமல் தெய்வபக்தியைக்- கொண்டு
ஜீவசேவை செய்திட வேண்டும்.
இருப்பதெல்லாம் இறைவனே என்ற
ஹிந்துதர்ம உண்மை கண்ட நம்
பரமஹம்ஸ ப்ரதம சீடராம் – வீர
நரேந்திரன் தலைமை கொள்ளுவோம்!- நாடு
வையத் தலைமை கொள்ளச் செய்குவோம்!
- நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர்- 2013
$$$