-மகாத்மா காந்தி
தேசத்தந்தை மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவர்களுள் பிரதானமானவர். அவர் பல இடங்களில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவற்றில் சில துளிகள் இவை….

சுவாமி விவேகானந்தரின் எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த பக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று..
சுவாமி விவேகானந்தர் எழுதியிருக்கும் நூல்களுக்கு யாருடைய முகவுரையும் தேவையில்லை. அவை தடுக்க முடியாத உயர்ந்த உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன.
***
இன்னொரு சமயத்தில் காந்திஜி பேசியது:
இன்று போற்றுவதற்கு உரிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரை நினைத்து, என்னுடைய வணக்கத்தைச் செலுத்தும் பொருட்டு , நான் இங்கு பேலூர் மடத்திற்கு வந்திருக்கிறேன்.
***
இளைஞர்களே! சுவாமி விவேகானந்தர் வாழ்ந்து மறைந்த இடமாகிய இதன் சக்தியை சிறிதளவாகிலும் மனதில் பதியவைத்துக் கொள்ளாமல், இங்கிருந்து செல்ல வேண்டாம் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
$$$