மாலைப் பொழுதின் மயக்கத்திலே…

-கவியரசு கண்ணதாசன்

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்... இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?




மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி!
மனதில் இருந்தும் 
வார்த்தைகள் இல்லை… 
காரணம் ஏன் தோழி? 
காரணம் ஏன் தோழி? 
ஆ..ஆ..ஆ..ஆஆ..

மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி!

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் 
என்றவர் யார் தோழி? 
இன்பம் கனவில் துன்பம் எதிரில் 
காண்பது ஏன் தோழி? 
காண்பது ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ..

மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி!

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் 
வடிவு கண்டேன் தோழி!
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் 
மாலையிட்டார் தோழி!
வழி மறந்தேனோ? வந்தவர் நெஞ்சில் 
சாய்ந்து விட்டேன் தோழி!
அவர் மறவேன் மறவேன் என்றார் 
உடனே மறந்து விட்டார் தோழி!
மறந்து விட்டார் தோழி…
பறந்து விட்டார் தோழி!
ஆ..ஆ..ஆ..ஆஆ..

மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் 
கணவர் என்றார் தோழி!
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் 
பிரிந்தது ஏன் தோழி? 
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் 
இதில் மறைந்தது சில காலம்!
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது 
மயங்குது எதிர் காலம்… 
மயங்குது எதிர் காலம்!

ஆ..ஆ..ஆ..ஆஆ..

மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி? 
காரணம் ஏன் தோழி? 
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி

$$$

திரைப்படம்: பாக்யலக்ஷ்மி (1961)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடகர்: பி.சுசீலா 
நடிப்பு: ஜெமினி கணேசன், ஈ.வி.சரோஜா, சௌகார் ஜானகி 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s