இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இந்திய விமானம் மற்றும் வான்வெளிப் படை அல்லது இந்திய வான் மற்றும் விண்வெளிப் படை (IASF - Indian Air and Space Force) என பெயரிடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் மாற்றம் இதுவரை ‘தீரமிகு விமானப்படை’ என்றிருந்தது, வரும் காலத்தில் ‘மதிப்புமிக்க விண்வெளிப்படை’யாக மாறுவதன் ஓர் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலகில் மட்டுமின்றி புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு சேவையை விரிவாக்குவதற்கான இந்திய விமானப்படையின் தொலைநோக்குப் பார்வை - 2047 என்ற மாற்றத்திற்கான திட்ட வரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Tag: தேசியம்
இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...
குணமது கைவிடேல்
எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும், தீர்க்காயுளும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்? இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன். நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது?
புத்தொளியில் நீதிமன்றங்கள்
2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....
புத்தொளியில் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....
புத்தொளியில் மதச்சார்பின்மை
பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!
பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…
சுதந்திர தினச் செய்தி
‘சூல்’ என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது (2019) பெற்றவர் கரிசல் நில எழுத்தாளர் திரு. சோ.தர்மன். அவரது முகநூல் பதிவு இங்கே சுதந்திர தினச் செய்தியாக மலர்ந்திருக்கிறது...
தேசத்திற்கே முதல் இடம்!
தேசத்திற்கே முதல் இடம்! பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள இக்கட்டுரை மிகவும் அற்புதமானது; அனைவரும் படிக்க வேண்டியது...
கங்கை – காவிரி சங்கமம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி ‘காசி தமிழ் சங்கமம்’ டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெற்றது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்று வந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரும், ஜோதிட வல்லுநருமான திரு. ஸ்ரீதரம் கு.சிவகுமார் அவர்களின் அனுபவப் பகிர்தல் இது….
காசி தமிழ் சங்கமம்: ஒரு மகத்தான அனுபவம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாரனாசியில், நவம்பர் 17-இல் தொடங்கி ‘காசி தமிழ்ச் சங்கமம்’ டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெறுகிறது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவரான விஜயபாரதம் துணை ஆசிரியர் திரு. சந்திர.பிரவீண்குமாரின் அனுபவங்கள் இவை...
நாட்டை இணைக்கும் தீபாவளி
நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....