1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது. இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் அனைத்தும் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால், அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.