தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக - அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக, மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.
Category: சிறப்புப் பகுதி
கவியரசரின் தைப்பாவை
கவியரசருக்கு சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக, திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே தைப்பாவை. சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப் படைப்புகளில் முக்கியமானது.
வெண்ணெய் கைவசம் இருக்க நெய் தேடி அலையலாமா?
மூத்த தமிழ் இதழாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார்....
வீரத் துறவி (கவிதை)
நாமக்கல் கவிஞர் திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை, மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதை உலகில் கோலோச்சியவர்; தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்; தமிழகத்தில் தேசியம் வளர்க்க பாடுபட்டவர். 1863-ஆம் ஆண்டு மகர சங்க்ராந்தி நன்னாளில் (அன்று ஆங்கிலத் தேதி: 1863, ஜன. 12) அவதரித்த சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய நாமக்கல் கவிஞரின் கவிதை இங்கே வெளியாகிறது….
தமிழ் சினிமாவின் தடுமாற்றம்
தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு நாசசக்தி புகுந்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் சினிமா தற்போது, பிரிவினைவாதம், அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எனத் தடம் புரண்டு விட்டது. இதன் பின்னணி என்ன? அத்துறையிலேயே தனது இருப்பை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநரான திரு. சின்னப்பா கணேசன் காரணங்களை அலசுகிறார்….
மராமரப் படலம்
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்தில் தன் மனதைப் பறிகொடுத்தவர்; தனது எழுத்துகளால் நம்மை வசீகரிப்பவர். இதோ அவரது இனிய கட்டுரை....
ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!
பெண் சாதனையாளர், தொழிலதிபர், எழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் எனப் பன்முகம் கொண்ட செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி கூறும் வெற்றி மந்திரம் இக்கட்டுரை....
பொருள் புதிது – தீபாவளி மலர் 2022
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)
தரித்த நறுந்திலகம்!
நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்! இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.
உண்மையான தீபாவளி!
மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று. நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!
சனாதனத்தில் சமத்துவம்
தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....
நாட்டை இணைக்கும் தீபாவளி
நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....
தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)
'வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் 'பொருள் புதிது’ வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...
டானா கம்பியும் பொட்டு வெடியும்
எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...
அச்சமில்லை… அச்சமில்லை..!
திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்; திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச் சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…