தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; மருத்துவர்; சிறந்த பேச்சாளர்; பாரதி ஆர்வலர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஜி20 இருக்கை பேராசிரியரான, டாக்டர் சுதா சேஷய்யன்  ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…

புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்!

பகுத்தறிவு என்ற போர்வையில், கேள்விகளை மட்டுமே எழுப்பி கேலி பேசிய வீணர் கூட்டத்தால் நமது கடவுளர்கள் அவதூறு செய்யப்பட்ட அதே காலத்தில், அந்தக் கூட்டத்துக்குள்ளேயே குத்துவெட்டு நிகழ்ந்ததும் கடவுளின் லீலை தான். இதோ, முதிய வயதில் திருமணம் செய்து, தனது அறிவுரையை தானே மீறிய பெரியவர் ஒருவரை அவரது சீடனே கண்டிக்கிறார். 9.7.1949-இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - மணியம்மை திருமணம் நடைபெற்றது. அதனைக் கண்டித்து ‘திராவிட நாடு’ பத்திரிகையில் (03.07.1949) தி.மு.க. நிறுவனர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கட்டுரை இது:

ஆஷ் படுகொலையும் வாஞ்சியின் தியாகமும்

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலமாக அவர்களை நாட்டை விட்டுத் துரத்திவிட முடியும் என்று சிலர் நம்பினர். அத்தகைய நிகழ்வுகளுள் ஒன்றுதான், தமிழகத்தின் மணியாச்சியில் நிகழ்ந்த துணை கலெக்டர் ஆஷ் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர் வீரவாஞ்சி. ஆனால், அவருக்கு நமது மாநிலம் உரிய மதிப்பை அளித்திருக்கிறதா? நண்பர் திரு. கி.கார்த்திக்குமார் எழுதியுள்ள இக்கட்டுரை அளிக்கும் பதில் வேதனையானது தான்...

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவோம்!

நமது முன்னோரை அவர்களது நினைவிற்குரிய திருநாட்களில் நினைவுகூர்வதும் வணங்கி மகிழ்வதும் மரபு. அந்த அடிப்படையில், வைகாசி விசாகமான இன்று திருவள்ளுவரைப் போற்றி மகிழ்கிறோம். இந்நாளில் வைகாசி அனுஷமே திருவள்ளுவர் நாள் என்று, 1931-இல் கூடி உறுதி செய்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு நன்றி கூறுகிறோம். இன்று தமிழகம் எங்கும் தேசிய, தெய்வீக நம்பிக்கை மிக்கவர்களால் திருவள்ளுவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வெளியிடுகிறோம்…

சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!

இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம், இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...

கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-2

தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை (பகுதி- 2) இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..

கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1

தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..

தமிழகத்தின் விவேகானந்தர்

திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது இனிய ஒப்பீட்டுக் கட்டுரை இது…

புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா

வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....

முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரதத்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ள அரிய கட்டுரை இது...

அபூர்வ மனிதர்  தரம்பால்

பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்  

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

இந்தியாவின் பல்கேரிய நண்பர் ரகோவ்ஸ்கி

‘உலக நாகரிகத்தின் தொட்டில் இந்தியா’ என்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் 1893 இல் முழங்கினார். அவர் இதைச் சொல்வதற்கு முன்னதாகவே ஒரு ஐரோப்பியப் புரட்சியாளர் இதை எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?  ஜார்ஜி  ரகோவ்ஸ்கி என்ற பல்கேரிய நாட்டுப் புரட்சியாளர் இதை தான் நடத்திய பத்திரிகையில் எழுதியுள்ளார்.

ஸ்ரீநீவாசனுக்கு வைர கிரீடம் சூட்டிய ரங்கநாதன்

அரசியலில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை என்பது காண அரிதான தமிழகச் சூழ்நிலையில், ரங்கநாத முதலியாரின் நினைவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது....

தமிழ்த்தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?