ஸ்டார் லிங்க்கை அல்ல, எலான் மஸ்க்கைத் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்!

அமெரிக்காவைச் சார்ந்த ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், செயற்கைக்கொள் அலைவரிசை உரிமத்திற்காக இந்தியாவில் காத்திருக்கிறார். ஆனால், அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மறுக்கிறார். மாறாக, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, தொழில் விவகாரத்தை வேறு எல்லைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார். அவருக்கு 'ஃபியூச்சர் ஈஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் திரு செமு பட் பொருத்தமான பதிலடி அளித்திருக்கிறார்...