நவீன இந்திய அறிவியலின் தந்தை

அறிவியல் சாதனைகள் பலவற்றின் நாயகரான சர்.சி.வி.ராமன் ‘இந்திய விஞ்ஞானத்தின் தந்தை’  என்று போற்றப்படுகிறார்.  ‘ராமன் விளைவை’  அவர் கண்டறிந்த 1928, பிப்ரவரி 28 தினத்தை கௌரவிக்கும் விதமாக, அந்நாளை தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.