லீக் முக்த் பாரதம் வேண்டும்

-பி.ஆர்.மகாதேவன்

உலகிலேயே மதச்சார்பின்மைக் கோட்பாடு மிகவும் கேவலமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவில் தான். அதனால்தான் தேசியப் பாடலான வந்தே மாதர கீதமும் கூட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு, மத அடிப்படைவாதிகள் அற்ற பாரதம் உருவாவது தான் என்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

தேசியப் பாடலை அவமதிப்பதென்பது தேசிய கீதத்தை, தேசியக் கொடியை அவமதிப்பதற்கு இணையானதே. 

அண்டோனியோ மெய்னோ காங்கிரஸ்  நினைத்திருந்தால் வந்தே மாதரம் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாடியிருக்கலாம்.  ஏனென்றால் முழுப் பாடலையும் பாடவேண்டும் என்று அரசு சொன்ன விதி, கட்சிக் கூட்டங்களுக்குப் பொருந்தாது. ஆனால் வந்தே மாதரம் பாடலையும் இந்து உணர்வுகளையும் பொதுவெளியில் அவமானப்படுத்தவேண்டும் என்ற சோனியா கட்சியின் கொள்கைக்கு ஏற்ப, திட்டமிட்டே அந்தப் பாடலை முழுவதுமாக ஒலிக்கவைத்து, அது பாடப்படும்போது அநாகரிகமாக நடந்தும் காட்டியிருக்கிறார்கள்.

விபூதியை இட்டுவிடச் சொல்லிவிட்டு அழிப்பது போன்ற வெறுப்பு, வன்மம், அவமரியாதை.

இந்து தெய்வங்கள், இந்து அடையாளங்கள் பற்றிய வரிகள் இருப்பதால் முஸ்லிம்களால் இதைப் பாடமுடியவில்லை என்றும், அப்படியான அம்சங்கள் இல்லாத முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடலாம் என்றும், இந்திய தேசிய காங்கிரஸ் 1937-இல் முடிவெடுத்தது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்த ரவீந்திர நாத் தாகூர் 1890களில் காங்கிரஸ் கூட்டங்களில் ஆறு பத்திகளையும் முழுமையாகப் பாடியிருக்கிறார். 

இன்று நாம் கேட்டுப் பரிச்சயமாகியிருக்கும் வந்தே மாதரம் பாடலின் ராகம் பண்டிட் ரவிசங்கரால் அமைக்கப்பட்டது.

காங்கிரஸில் இருந்த முஸ்லிம்கள் தலைவர்கள் துர்க்கை பற்றியும் பிற இந்து அடையாளங்கள் பற்றியும் வரும் வரிகளைப் பாடமாட்டேனென்று சொல்லியதால், இந்து தலைவர்கள் அவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தனர்.

ஆனால், முஸ்லிம் லீக்  ‘முதல் இரண்டு பத்திகளையும் கூடப் பாடமாட்டோம்’ என்றே சொன்னது. ஒரு நாளும் அவர்கள் வந்தே மாதரம் பாடலை தமது நிகழ்ச்சிகளில் பாடியதில்லை. இத்தனைக்கும் 1947 வரையில்  வந்தே மாதரம் பாடலே இந்தியா முழுவதுமான சுதந்தரப் போராட்டத்தின் முத்திரைப் பாடலாகவும் முழக்கமாகவும் இருந்தது. ஆனால் முஸ்லிம் லீகினர் அதை ஒரு நாளும் பாடியதில்லை. 

சர்ச்சைக்குரிய பத்திகள் என்று தனியாக எதுவும் இல்லை. அந்தப் பாடலே, அந்த உணர்வே முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மதத்துக்கு மாறானது என்று சொல்லித் தான் வந்தே மாதரம் என்ற முழக்கத்தைக்கூட அவர்கள் எதிர்த்தனர்.

‘சாரே ஜஹான் சே அச்சா… இந்துஸ்தான் ஹமாரா’ என்று இந்துஸ்தானின் பெருமையைப் பற்றியும்  “நாங்கள் எல்லாம் பெருமை மிகு இந்துக்கள்” என்றும் பாட்டு எழுதிய இஸ்லாமியக் கவிஞர் முஹம்மது இக்பால் விரைவிலேயே  “நாங்கள் பெருமை மிகு முஸ்லிம்கள்”  என்று மாற்றிக்கொண்டுவிட்டார். அதாவது இந்துக்கள் மதச்சார்பற்றவர்களாகத் தயாராக இருந்தும்,  முஸ்லிம்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருந்தார்கள்.

சமரசத்தீர்வு என்பதற்கு முஸ்லிம் லீகிடம் வாய்ப்பே கிடையாது. இரு தரப்புக்கும் பொதுவான  புள்ளி என்பது இஸ்லாமியர்களிடம் கிடையாது. எல்லாரும் இஸ்லாம் பக்கம் வந்தாக வேண்டும். அதுவே அவர்களின் முதலும் முடிவுமான இலக்கு.

அதை அவர்கள் எந்தக் காலத்திலும் மாற்றிக் கொண்டதில்லை. ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்ததைத் தொடர்ந்து தேசம் முழுவதும் அதைப் பெரிய விஷயமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் காந்தி கிலாஃபத் இயக்கத்தை முன்னெடுத்தார். 

ஜாலியன் வாலா பாக் படுகொலை என்பது சீக்கியர், ஹிந்துக்களுடைய விஷயம். அதை முன்வைத்துப் போராட ஆரம்பித்தால் முஸ்லிம்கள் வரமாட்டார்கள். எனவே முஸ்லிம்களும் சுதந்தரப் போராட்டத்தில் இணைய வேண்டுமென்றால் கிலாஃபத் இயக்கத்தைத்தான் முன்னெடுக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். 

மேலோட்டமாகப் பார்த்தால், மத நல்லிணக்கம் நல்லதுதானே என்றுதான் தோன்றும். ஆனால், கிலாஃபத் என்பது பழமைவாத இயக்கம். உதுமானிய – துருக்கி இஸ்லாமிய மக்களே கலீபா அதிகாரத்தை அதாவது இஸ்லாமிய மதவாத சக்திகளை எதிர்த்துக் களம் இறங்கியிருந்தனர். 

இந்து மதத்தில் சீர்திருத்தங்களை விரும்பிய காந்தி, இஸ்லாமிலும் இஸ்லாமிய எளிய மக்கள் விரும்பிய சீர்திருத்தத்துக்குத்தான் ஆதரவு தந்திருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர் ஆதரவாக நின்றார். 

காந்தியின் இஸ்லாமிய அப்பீஸ்மென்ட் (தாஜா செய்தல்) என்பது, உண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத அப்பீஸ்மென்டே. எளிய முஸ்லிம்களை அவர் வெறுத்து ஒதுக்கவே செய்தார்.

இந்து உணர்வாளர்கள்  தரப்பில் சிலர்,  “சரி… கிலாஃபத் போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம். இந்து தரப்பில் ஜாலியன் வாலாபாகைப் பின்னுக்குத் தள்ளுவதுபோல, அதாவது இந்து-சீக்கியருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பின்னரங்குக்குத் தள்ளுவதுபோல பசு வதையைக் கைவிடுவோம் என்று முஸ்லிம்கள் சொல்லட்டும். சமரச நல்லிணக்கம் என்றால் இரு தரப்பும்  ஒன்றை விட்டுக் கொடுக்கவேண்டும் அல்லவா?” என்று கேட்டார்கள். 

காந்தியோ  “இந்துக்களின் தரப்பாக நான் ஒருவனே போதும். நான் சொல்வதே இறுதி வாக்கியம். நான் சொல்லும் அளவுக்கு இந்துக்களின் நியாயம் காப்பாற்றப்பட்டால் போதும்” என்று சொன்னார்.

‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெறுவதற்கு முன்பே வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டிருந்தது. நாவலில், இந்து உணர்வாளர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடும்போது இந்தப் பாடலைப் பாடி எழுச்சி கொண்டதாக எழுதியிருந்தார். 

பாரதியின் பாடல்கள் தமிழகத்தில் சுதந்தரப் போராட்டங்களில் உத்வேகம் ஊட்டியதுபோல வந்தே மாதரம் பாடல் பாரதம் முழுவதும் உத்வேகம் ஊட்டியது. முஸ்லிம்களுமே அதைப் பாட முன்வந்திருப்பார்கள். ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதை விரும்பவில்லை. எனவே காந்தியும் அதை மதச்சார்பற்ற பாடலாக்கிக் கொண்டார் (பாடலை வெட்டினர்). 

அப்போதும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் விரும்பவில்லை. எனவே அதையும் விட்டுவிட்டு ‘ஜன கண மன’ என்ற பாடலைத் தேர்ந்தெடுத்தனர். இதைச் செய்தது நேதாஜி. ஆனால் அந்தப் பாடலையும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஏற்கவில்லை.

‘முஸ்லிமாக இருந்தால் முஸ்லிம் லீகில் சேரு’ என்ற பாடலைத்தான் அவர்கள் பாடினார்கள்.  ‘இந்தியா மட்டுமல்ல; சீனா மட்டுமல்ல; இந்த உலகமே முஸ்லிம்களுடையது’ என்று பாடினார்கள். 

இது  இப்படியென்றால், கொசோவா, போஸ்னியா நாடுகளில் தேசிய கீதத்துக்கு வார்த்தைகளே கிடையாது. அங்கிருக்கும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எந்த வார்த்தையை இடம்பெறச் செய்தாலும் தெருவில் இறங்கி சுட்டுக் கொல்ல ஆரம்பிப்பார்கள். அது இல்லாமலும் அதைத்தான் செய்கிறர்கள். ஆனால் தேசிய கீதத்தில் ஏதேனும் ஒரு வார்த்தையை இடம்பெறச் செய்தாலும் இறங்கி அடிப்பார்கள். 

அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் மட்டும் ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாடு அப்படித்தான் ஆகும். அங்கு இந்துப் பெரும்பான்மை இருந்தாலே இரண்டு கும்பலும் அடங்கியிருக்கும். 

சுருக்கமாகச் சொன்னால், எங்கெல்லாம் மோதல்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதி மார்க்க அடிப்படைவாதம் இருக்கும்; எங்கெல்லாம் அமைதி மார்க்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் அமைதி மார்க்க அடிப்படைவாதமே இருக்கும். அவர்கள்  ‘அல்லாஹு அக்பர்’ என்ற ஒரே ஒரு முழக்கத்தை மட்டுமே ஏற்பார்கள். அதிலும் ஷியாவும் சன்னியும் மட்டும் இருந்தால் அந்த முழக்கத்தை வைத்துக் கொண்டும்கூட, மசூதிகளில் வெடிகுண்டு வைத்து வெடித்துக் கொள்(ல்)வார்கள். 

ஆக அல்லாஹு அக்பர் முழக்கம் அல்ல; வெடிகுண்டே அவர்களின் பிரதான மதம்.

பாலைவனத்தில் உருவான போர்க்குடிகள் மற்றும் கொள்ளைக்கூட்டம் தான் போகுமிடமெல்லாம் அதே சுட்டெரிக்கும் சூரியனையும் வறண்ட பாலை நிலத்தையும் அதே ஒட்டகங்களையும் அதே ஆயுதங்களையும் சுமந்து செல்லும். 

கீறல் விழுந்த ரெக்கார்டு ஒரே வரியையே பாடும். 

ஓடாத கடிகாரம் ஒரே நேரத்தையே காட்டும்.

ஒரே வரியைப் பாடினால் அது அபஸ்வரம். 

ஒரே நேரத்தைக் காட்டினால் அது கெட்ட நேரம்.

இன்று இந்தியாவில் முஸ்லிம் லீக் இல்லை; அதாவது அதிகாரபூர்வமாக இல்லை.

நேர்மையான நீட் தேர்வுக்காக என்று தில்லியில் நடந்த போராட்டத்தில் கூட ‘ஆஸாதி’ முழக்கம் கேட்கவில்லை. அதேசமயம்,தமிழகக் கும்பல் அதை முழங்கியது. ஆஸாதி என்ற முழக்கம் காஷ்மீர் பிரிவினைவாதிகளின் முழக்கம். காஷ்மீரில் அது ஓய்ந்துவிட்டது. அல்லது ஓய்ந்ததுபோலத் தென்படுகிறது; தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 

தமிழ் தேசிய மேடைகளில் காஷ்மீர் பிரிவினைவாதிகள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஏறுவது எப்போதோ ஆரம்பித்துவிட்டது. நீட் தேர்வுப் போராட்டத்துக்குள்ளும் ஊடுருவுகிறது. 

முஸ்லிம் லீக் என்று தனியாக ஒரு கட்சி இல்லை. ஆனால் அந்த இந்து – இந்திய விரோத சிந்தனை இல்லாத கட்சியே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது. 

காங்கிரஸ் முக்த் பாரத் அல்ல; முஸ்லிம் லீக் முக்த் பாரத் தான் உண்மையில் அவசியம்.

$$$

Leave a comment