வந்தே மாதரத்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்க்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியைக் கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவகங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுபவை; அனைவருக்கும் பொதுவானவை.... எழுதுகிறார் சமூக சேவகர் திருமதி கீதாஜ்சலி ஆங்மோ...

ராஷ்ட்ர மந்திரம் வந்தே மாதரம்!

"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"

லீக் முக்த் பாரதம் வேண்டும்

உலகிலேயே மதச்சார்பின்மைக் கோட்பாடு மிகவும் கேவலமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவில் தான். அதனால்தான் தேசியப் பாடலான வந்தே மாதர கீதமும் கூட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு, மத அடிப்படைவாதிகள் அற்ற பாரதம் உருவாவது தான் என்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

மகாகவியின் மாறாத ஆசை

‘வந்தேமாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிக்கும் சட்டம் நிறைவேறிவிட்டது. அதுகுறித்த இனிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் திரு. மாலன். ’தினமணி’ நாளித்ழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பதிவாகிறது.

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

கடந்த ஜூலை 28ஆம் தேதி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா, தேசியப் பாடலான ’வந்தேமாதரம்’ கீதத்துடன் தொடங்கியதை தமிழகத்தில் சில அறிவிலிகள் எதிர்த்துள்ளனர். அவர்களுக்கான பதில் இது…

வந்தே மாதர மந்திரச் செய்யுள்கள் 

தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள்  சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின்  ‘வந்தே மாதரம்’ பாடல்களை  பெருமையுடன் வெளியிடுகிறது  ‘பொருள் புதிது’ இணையதளம்…. 

வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரச் சொல் 

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய இக்கட்டுரை ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது. இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

‘வந்தே மாதரம்’:  தேசபக்தியின் ஆழமான பொருள்

‘வந்தே மாதரம்‘ என்ற இரு சொற்கள், அந்த ஆன்மிக சக்தியின் உயிர்மூச்சு போலத் திகழ்கின்றன. இந்தப் பாடல், இந்திய மக்களின் மனங்களில் சுதந்திரத்தின் விதையை விதைத்த ஒரு பரிசுத்தமான மந்திரம் ஆகும்.... ஈரோட்டைச் சார்ந்த கவிஞர் திரு. அரங்க .சுப்பிரமணியம் (எஸ்.ஆர்.எஸ்.) எழுதியுள்ள கட்டுரை இது...

வந்தே மாதரமும் ஜெயகாந்தனும்

“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் - கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல - காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” - இது ஜெயகாந்தன் பேசியது...

நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!

வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்

‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....

வந்தே மாதரம்- மூலப் பாடலின் முழு வடிவம்

வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘வந்தே மாதரம்’ - முழுமையான மூலப் பாடலின் தமிழ் உச்சரிப்பு வடிவம் இது…