பாஞ்சாலி சபதம்- 2.2.9

-மகாகவி பாரதி

பாகன் மறுபடியும் அவையில் பாஞ்சாலியின் வாதத்தை வைத்தவுடன், துரியன் மேலும் கோபம் கொள்கிறான். பீமனுக்கு அஞ்சி பாகன் தயங்குவதாகக் கூறும் அவன்,  “பாஞ்சாலியை அழைத்துவர பாகனால்  இயலாது. எனவே நீ சென்று அவளை இழுத்து வா?” என்று தம்பி துச்சாதனனிடம் ஆணையிடுகிறான். இரண்டாம் பாகத்தின் இரண்டாம் சருக்கம் இத்துடன் நிறைவெய்துகிறது...

இரண்டாம் பாகம்

2.2. துகிலுரிதற் சருக்கம்

2.2.9. துரியோதனன் சொல்வது

பாகன் உரைத்தது கேட்டனன் – பெரும்
      பாம்புக் கொடியவன் சொல்கிறான்: – ‘அவன்
பாகன் அழைக்க வருகிலள்; – இந்தப்
      பையலும் வீமனை அஞ்சியே – பல
வாகத் திகைப்புற்று நின்றனன்; – இவன்
      அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன், – ‘தம்பீ!
போகக் கடவைஇப் போதங்கே; – இங்க
      பொற்றொடி யோடும் வருகநீ! 59

.

துகிலுரிதற் சருக்கம் முற்றிற்று

$$$

Leave a comment