-கவியரசு கண்ணதாசன்

ஜாவர் சீதாராமனின் திரைக்கதை வசனத்தில், கே.சங்கரின் இயக்கத்தில், 1962-இல் வெளியான திரைப்படம் ஆலயமணி. முக்கோணக் காதல்கதைதான்; ஆனால், பண்பாடு மீறாத கதைக்களம். படத்தில் உள்ள ஏழு பாடல்களையும் கவியரசு கண்ணதாசனே எழுதி இருக்கிறார். அத்தனையும் தமிழ்த் திரையுலகின் சொத்து. விதிவசமாக காதலை தியாகம் செய்து நாயகனை கணவனாக ஏற்கும் மனைவியாக சரோஜாதேவி நடித்திருக்கும் இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசன். ஊனமுற்ற தன்னை கண்போலக் காக்கும் மனைவியைப் பற்றி கணவன் பாடுவதாக அமைந்த அற்புதமான பாடல் இது...
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே!
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே! (2)
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே!
ஆலய மணியின் இன்னிசை நீயே! (2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே!
தங்கக் கோபுரம் போல வந்தாயே!
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே!
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே!
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்!
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்! (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்!
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை!
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே!
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே!
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே! (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே!
உருவம் இரண்டு, உயிர்கள் இரண்டு,
உள்ளம் ஒன்றே என்னுயிரே!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே!
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே!
திரைப்படம்: ஆலயமணி (1962) இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடகர்: டி.எம்.சௌந்தரராஜன் நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி
$$$