பாஞ்சாலி சபதம் – 1.2.6

-மகாகவி பாரதி

வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.6. சகுனியின் ஏச்சு

கலகல வெனச்சிரித் தான்- பழிக்
      கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
‘பலபல மொழிகுவ தேன்?- உனைப்
      பார்த்திவன் என்றெணி அழைத்துவிட் டேன்.
”நிலமுழு தாட் கொண் டாய்- தனி
      நீ”எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற்- செலுஞ்
      செலவினுக் கழிகலை எனநினைந் தேன்.       168

‘பாரத மண்டலத் தார்- தங்கள்
      பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ?- தொழில்
      சூதெனி லாடுநர் அரசரன் றோ?
மாரத வீரர்முன் னே,- நடு
      மண்டபத் தே,பட்டப் பகலினிலே,
சூரசி காமணியே- நின்றன்
      சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169

‘அச்சமிங் கிதில்வேண்டா,- விரைந்
      தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா- நல்ல
      காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல் வாய்;- வெற்றி
      நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்;- பல
      நினைகுவ தேன்?களி தொடங்கு கென்றான்       170

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s