சிவகளிப் பேரலை – 71

எவ்வளவு சிறப்பான பேரரசுகளும் ஒருகாலத்தில் அழிந்துவிடும், மண்ணோடு மறைந்துவிடும். ஆனால், சிவபெருமான் மீதான பக்தி சாம்ராஜ்யம், அவரது பாதார விந்தங்களில் உறைகின்ற முக்தி சாம்ராஜ்யம் அழிவற்றது. இதனை இந்த ஸ்லோகத்தில் அருமையாக விளக்குகிறார் பகவத்பாதர். ....

சிவகளிப் பேரலை- 70

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர்.  அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற  பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். ....

சிவகளிப் பேரலை – 69

ஒரு தாய் எப்படி தனக்குப் பிறந்த குழந்தைகளைப் படித்தவர், படிக்காதவர், அழகுள்ளவர், அழகற்றவர், பலவான், பலவீனன்,   நல்லவர், கெட்டவர் என பேதம் பார்க்காமல் அன்பு செலுத்துகிறாளோ, அதனைப்போல உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமான் தாயுமானவனாக இருந்து பன்மடங்கு அன்பு பாராட்டி பக்தரை அரவணைக்கிறார். ....

சிவகளிப் பேரலை – 68

முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது.

சிவகளிப் பேரலை- 67

     மனம் பிறழாமல் இன்ப துன்பத்தை சமநிலையில் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த மனநிலை. அது வாய்க்கப் பெற்றவர்கள், இம்மையிலேயே விடுதலை (முக்தி) பெற்றவர்கள். அவ்வாறான உயர்ந்த மனப்பக்குவம் கிடைக்க நம்மைத் தயார்படுத்துவது இறைவன் சிவபெருமான் குறித்த தியானமே

சிவகளிப் பேரலை- 66

சிவபெருமான் நடராஜனாக, ஆடலரசனாகத் திகழ்கிறார். அவரது நடனம்தான் இந்த உலகின் இயக்கம். அவரது திருவிளையாடல்தான் அனைத்தும். இதனையே இந்தச் செய்யுளில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....

சிவகளிப் பேரலை – 65

  சிவபெருமானின் பாதங்களில் பக்தன் தன் மனத்தை காலணியாக காணிக்கையாக்க  வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஸ்ரீஆதிசங்கரர், அவ்வாறு இறைவன் திருக்கமலப் பாதங்களில் காலணியாக இருப்பதால் பக்தனுக்குக் கிடைக்கும் பரமானந்தப் பலன்களை இந்த ஸ்லோகத்தில் பட்டியலிடுகிறார்.....

சிவகளிப் பேரலை – 64

செருப்பணிந்த காலால் மிதித்து அர்ச்சித்த கண்ணப்ப நாயனாரின் பெருமையை முந்தைய ஸ்லோகத்தில் எடுத்துரைத்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் சிவபெருமானின் காலுக்குச் செருப்பாக பக்தனின் மனது திகழ வேண்டும் என்பதை கனிந்த பக்தியுடன் எடுத்தியம்புகிறார்.....

சிவகளிப் பேரலை- 63

   உண்மையான பக்தி இருக்கும் இடத்தில், பக்தனுக்குரிய குறைகளை சிவபெருமான் பார்ப்பதில்லை. இருக்கின்ற குறைகளும் அவனருளால் நீங்கி, நிறைவே தோன்றும். பக்தனுக்குரிய குறைகளைப்  பார்க்காமல், பக்தியைப் பாராட்டி, அவனுக்கு உயர்ந்த பதவியைத் தந்தருள்பவர் சிவபெருமான். இதற்குப் பல புராணங்களும், சரித்திரங்களுமே சான்று. அவற்றில் கண்ணப்ப நாயனாரின் சரிதத்தைக் கோடிட்டுக் காட்டி, பக்தனை மதிக்கும் பரமசிவனின் பெருமையை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.....

சிவகளிப் பேரலை – 62

ஒரு குழந்தையை அதனது தாய், வாஞ்சையுடன் கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறாள். பக்தனுக்கு இறைவன் தகப்பனாய் இருக்க, அவர் மீதான பக்தியே, தாய்போல் பக்தனைக் காப்பாற்றுகிறதாம்....சிவபெருமான் மீதான இந்த பக்தியின் பெருமையைத்தான், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினு மெய்ப்பொரு ளாவது, நாதன் நாமம் நமசிவாயவே” என்று திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்....

சிவகளிப் பேரலை- 61

இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க, பக்தியே வித்து.  பக்தியை விதைத்துத்தான் முக்தியை அறுவடை செய்ய முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பின் கிடைக்கும் நிலை மாத்திரம் அல்ல. உயிரோடு இருக்கும்போதே அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவதும் முக்திதான். ...

சிவகளிப் பேரலை – 60

இறைவனின் திருப்பாதங்களைச் சரண் புகுவதால் அனைத்துவிதத் துன்பங்களில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். இறைவன் திருவடித் தாமரை மீதான விருப்பம், அதனை எப்படியும் அடைந்தே தீரூவது என்ற விடாப்படியான முயற்சியுடன், உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் அது கைவசமாகாது. நினைப்பே நம்மை உந்தித் தள்ளுகிறது, முன்னேயும் பின்னேயும். ....

சிவகளிப் பேரலை – 59

கைவல்யம் என்றால் அதற்கிணையாக வேறொன்றும் இல்லாதது என்று பொருள். இறைவனின் திருவடிகளே கைவல்யபதம், அதுவே கைவல்ய சுகத்தை அளிப்பது. கைவல்யம்= மோனப் பெருநிலை= ஒன்றுதல். வேறு நினைப்பு அறுந்துபோய் அதுமாத்திரமே இருத்தல்.             ....

சிவகளிப் பேரலை- 58

இறைவனுடைய திருக்காட்சி தெரிந்தும்கூட, கண்ணிருந்தும் குருடர்களாய் சிலர் வீழ்ந்து கிடப்போம். மாயை இருளால், அவன் தெரிந்தும், தெரியாமல் இருக்கிறான். ஆகையால், காட்சியைக் கொடுக்கின்ற அவனே, அதற்குரிய கருத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம் போன்றோருக்காக சிவபெருமானிடம் இறைஞ்சுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 57

     சிவபெருமானின் மகிமையைக் கூறும் ஆனந்தத் தாண்டவத்தை மனக் கண் முன்னர் பக்தர்கள் காண்பது, அவர்களது முற்பிறவிப் பயனால்தான் அமைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டதும் இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இறைவனிடமே அருள் புரிய இறைஞ்ச வேண்டும் என்பதை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். சாதாரண மனிதரைப்போல் தம்மை பாவித்துக்கொண்டு, நமக்காக இதனை அவர் பாடியுள்ளார்.