பேரொலியும் புரட்சி வேகமும் பின்னிப் பிணைந்தாட சுவாமி விவேகானந்தரின் அசரீரி முடிந்து போகிறது; அது முடிகிற போது, ஒரு தேசம் ஆரம்பமாகிறது.- பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை...
Tag: கவிதை
சுவாமி விவேகானந்தர் திருவடி வாழ்க! (கவிதை)
திரு. இராம.வேணுகோபால், ஆசிரியர்; குடியாத்தத்தில் வசிக்கிறார். சித்த மருத்துவர்; பத்திரிகையாளர்; கவிஞர் எனப் பல பரிமாணங்களை உடையவர். ‘செந்தமிழ்க் கூத்தன்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். 2சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இது…
பகலவனே வாழி!
திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....
விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...
வீர நரேந்திரா விவேகானந்தா! (கவிதை)
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....
விவேகாநந்த வெண்பா (கவிதை)
திரு. ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், ஆன்மிக நாட்டம் கொண்ட எழுத்தாளர், கவிஞர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் மீதான வெண்பாக்கள் இவை….
விளையும் பயிர் (கவிதை)
ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.
விவேகாநந்தர் (கவிதை)
கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்; கோவையில் வசிக்கிறார். ’ஓம் சக்தி’ ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….
போற்றி! போற்றி! (கவிதை)
திருமதி சௌந்தரா கைலாசம் (1927- 2010), கரூரைச் சார்ந்தவர்; மறைந்த முன்னாள் நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி; எழுத்தாளர்; இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். யாப்பிலக்கணத்துடன் மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது…
தீபம் போதும்! (கவிதை)
மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)
விவேகானந்தப் பேரொளி (கவிதை)
தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…
காலம் பிறக்கட்டும்! (கவிதை)
கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில் கவிதை பரவட்டும்! கனவுகள் கண்முன் நனவாய்க் காணும் காலம் பிறக்கட்டும்!
விழித்தெழும் பாரதமே! (கவிதை)
இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.
புத்தாண்டுக் கவிதைகள் இரண்டு
நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய வாழ்நாளே. உறங்கி விழிப்பதே புதிய பிறவி தான். எனில் புத்தாண்டு என்பது என்ன? இக் கவிதைகள் செயற்கையான மின்சிசிறிக் காற்றை மறுதலித்து இயற்கைத் தென்றலை நாடுமாறு சொல்கின்றன... எனி ஹவ், ஹேப்பி இங்கிலிஷ் நியூ இயர்!
மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி...