திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

திருப்பரங்குன்றம்: அரசின் நிலைப்பாடு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த  (புதிய) மாநில அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

திருப்பரங்குன்றம்: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு திருப்பங்கள்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மீறிய தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய், புதன் கிழமைகளில் இரு திருப்பங்களைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், புதன்கிழமை இவ்வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரித்ததுட்டன் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18க்கு ஒத்திவைப்பு

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்; உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது" என்று திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம்,  மாசி மகம்- பௌர்ணமியை ஒட்டி (மார்ச் 2ஆம் தேதி) மேற்கொள்ளப்பட்டது. ...

ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இரு நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை அமர்வு) தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரியது தமிழக அரசு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஏளனம் பேசிய தமிழக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது (பிப். 2), நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பான சில பத்திரிகை செய்திகள் இங்கே…

நீதிபதிக்கு எதிரான அவதூறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…

நீதிபதிக்கு எதிரான அவதூறு; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...

திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருக்கார்த்திகையும் தமிழரும்

திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் தொடர்பாக, தினமணி நாளிதழில் சென்ற மாதம் வெளியான ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்களின் கட்டுரை, பல இலக்கிய ஆதாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது. தற்போதைய சூழலில் இக்கட்டுரை தேவை கருதி நன்றியுடன் மீள்பதிவாகிறது.