பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்

பாரசீகத்தில் இருந்து பிரிட்டீஷ் படைகள் வெளியேறுவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் மகாகவி பாரதி, இந்தியாவின் நிலை குறித்து சிந்திக்க வைக்கிறார்.....

துருக்கியின் நிலை

துருக்கிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை நெடிய வரலாறு கொண்டது. மகாகவி பாரதி தனது உலக அரசியல் ஞானத்தை இக்கட்டுரையில் (1920) வெளிப்படுத்துகிறார்....

மருதமலை மாமணியே முருகய்யா!

அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள். தைப்பூச சிறப்புப் பதிவாக கவியரசர் தெய்வீகப் பாடல் இங்கே....

சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை

சீனாவில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து அதுதொடர்பாக சுதேசமித்திரனில் கட்டுரை வரைகிறார் மகாகவி பாரதி. சீனாவின் சிறப்புகளைப் பட்டியலிடவும் அவர் தவறவில்லை. இவையெல்லாம் 1906 ஆம் ஆண்டுக்கால சீனா. இச்செய்தியைக் கூறுவதன்மூலம் இந்தியாவிலும் மாற்றம் நிக்ழும் என்பது தானே இதழாளரின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்?

இந்தியாவை உருவாக்கியவர்

செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் சிறப்பிதழுக்கு 2014-இல் இவர் வழங்கிய வாழ்த்துரை இது….

ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்

ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...

நரேந்திரன் தலைமை நாட்டுக்குத் தேவை!

திரு. க்ருஷ்ண.ஜகந்நாதன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஊழியர்களுள் ஒருவர். அதன் முழுநேர ஊழியராகவும் வித்யாபாரதி அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர். தற்போது ‘தர்ம ரக்‌ஷண சமிதி’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது பாடல் இது…

பூகோள மஹா யுத்தம்

லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…

கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்

திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி’’

மகாகவி பாரதி உலகப் பத்திரிகைகள் பலவற்றை தினந்தோறும் வாசித்தவர். அவற்றில் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த தமிழாக்கி வழங்கியவர். கீழுள்ள செய்தி, அவ்வாறு சுதேசமித்திரனில் இதழாளர் பாரதி அளித்த செய்தி. ஐரோப்பியக் கண்டத்தில் நேசக்கட்சியாரின் ஆதிக்கத்தில் ஜெர்மனி நாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்த செய்தி இது. இச்செய்தியில் பாரதியின் உலக அரசியல் அறிவையும், அதிலும் இந்தியா தொடர்பான அவரது மன ஏக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். “மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லை யெனில், ஏன் இல்லை?” என்ற கேள்வியில் ஜொலிக்கும் உரிமைக்குரல், மகாகவி பாரதிக்கே உரித்தான இதழாளனின் நெஞ்சக்கனல்.

விவேகாநந்தர் (கவிதை)

கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்;  கோவையில் வசிக்கிறார்.  ’ஓம் சக்தி’  ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….