மருதமலை மாமணியே முருகய்யா!

-கவியரசு கண்ணதாசன்

அனைவருக்கும்

தைப்பூச நன்னாள் வாழ்த்துகள்!

.

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை!
ஆஆஆ.. மருதமலை! மருதமலை முருகா!

.

மருதமலை மாமணியே முருகய்யா!
மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!
மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!
மருதமலை மாமணியே முருகய்யா!

.

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்….
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்!
ஐயா உமது மங்கல மந்திரமே!

.

மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!
மருதமலை மாமணியே முருகய்யா!

.

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா, ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ…!

.

மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!
மருதமலை மாமணியே முருகய்யா!

.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்!
நாடியென் வினை தீர நான் வருவேன்…
நாடியென் வினை தீர நான் வருவேன்!

.

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக,
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..!

.

மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!
மருதமலை மாமணியே முருகய்யா!

.

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்….நான் மறவேன்!
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன்…நான் வருவேன்!
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்…நான் மறவேன்!
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன்….நான் வருவேன்!

.

பரமனின் திருமகனே, அழகிய தமிழ்மகனே!
பரமனின் திருமகனே, அழகிய தமிழ்மகனே!
காண்பதெல்லாம்…….
உனதுமுகம் அது ஆறுமுகம்!
காலமெல்லாம்……
எனதுமனம் உருகுது முருகா!
காண்பதெல்லாம்…..
உனதுமுகம் அது ஆறுமுகம்!
காலமெல்லாம்……
எனதுமனம் உருகுது முருகா!

.

அதிபதியே, குருபரனே, அருள்நிதியே, சரவணனே!
அதிபதியே, குருபரனே, அருள்நிதியே, சரவணனே!

.

பனியது, மழையது, நதியது, கடலது,
சகலமும் உனதொரு கருணையில் எழுவது!
பனியது, மழையது, நதியது, கடலது,
சகலமும் உனதொரு கருணையில் எழுவது!
வருவாய் குகனே! வேலய்யா! ஆஆ…!
தேவர் வணங்கும் மருதமலை முருகா!

.

மருதமலை மாமணியே முருகய்யா!
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா, ஐயா!

.

திரைப்படம்: தெய்வம் (1972)
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடகர்: மதுரை சோமு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s