-மகாகவி பாரதி
11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.

விந்தைத் திலகர் அரவிந்தரொடு பாலர்பதி
சிந்தைச் சிதம்பரமாம் செம்மலுமே – வந்திலரேல்
ஆதரமாம் அன்னை வளநாடெங் கேவந்தே
மாதரமாம் மந்திரம்எங் கே?
$$$