-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
60. ராதைப் பாட்டு
ராகம் – கமாஸ்; தாளம் – ஆதி
பல்லவி
தேகி முதம் தேகி ஸ்ரீராதே, ராதே!
சரணங்கள்
ராக ஸமுத்ர ஜாம்ருதே ராதே, ராதே!
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந ராதே, ராதே!
போக ரதி கோடி துல்ய ராதே, ராதே! (ஜயஜய)
பூதேவி தப: பல ராதே, ராதே! (தேகி)
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்தியா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதிபரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி)
தமிழ்க் கண்ணிகள்
காதலெனுந் தீவினிலே, ராதே ராதே! அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி) 1
காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே! நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி) 2
மாதரசே! செல்வப் பெண்ணே, ராதே, ராதே! – உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி) 3