தணிக்கையாளர் திரு. டி.எஸ்.வைகுண்டம், மதுரையில் வசிக்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் தமிழகப் பொருளாளர், மாநில சேவைப் பிரிவுச் செயலாளர், சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழாக் குழுவின் தென் தமிழகப் பொருளாளர், ஏகல் வித்யா கேந்திரத்தின் மாநிலத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
Tag: விவேக மலர்
விளையும் பயிர் (கவிதை)
ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.
பிரிவினை மனநிலைகள் : ஒரு தீர்வு
கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....
இந்தியாவை உருவாக்கியவர்
செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் சிறப்பிதழுக்கு 2014-இல் இவர் வழங்கிய வாழ்த்துரை இது….
நரேந்திரன் தலைமை நாட்டுக்குத் தேவை!
திரு. க்ருஷ்ண.ஜகந்நாதன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஊழியர்களுள் ஒருவர். அதன் முழுநேர ஊழியராகவும் வித்யாபாரதி அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர். தற்போது ‘தர்ம ரக்ஷண சமிதி’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது பாடல் இது…
கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்
திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
விவேகாநந்தர் (கவிதை)
கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்; கோவையில் வசிக்கிறார். ’ஓம் சக்தி’ ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….
போற்றி! போற்றி! (கவிதை)
திருமதி சௌந்தரா கைலாசம் (1927- 2010), கரூரைச் சார்ந்தவர்; மறைந்த முன்னாள் நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி; எழுத்தாளர்; இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். யாப்பிலக்கணத்துடன் மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது…
சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்
திரு. கோ.ஆலாசியம், தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கு கப்பல் துறையில் மின்னணுவியல் பொறியாளராக 32 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்; வேதாந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…
விவேகானந்தர்- 150 ஆண்டுகளைக் கடந்து…
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளராகவும், விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் திரு. நா.சடகோபன். சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…
மேலை நாட்டு ஸ்பினோஸாவும், கீழை நாட்டு நரேந்திரரும்
விஜயபாரதம் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. சந்திர. பிரவீண்குமார், சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது…
கடவுளைக் காண மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள்!
தினகரன் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு.மு.நாகமணி, சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….
ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்
தினமணி நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….
விவேகானந்தப் பேரொளி (கவிதை)
தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…
விவேகானந்த பஞ்சகம்
வணக்கத்திற்குரிய சுவாமி விபுலானந்தர் (1842- 1947) இலங்கையைச் சார்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் முதல் சந்நியாச ஆசிரியர். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த முன்னோடி ஆராய்ச்சியாளர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது அரிய கவிதை இது…