ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் 'ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில் தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள் என்பது சுவாரஸ்யமான தகவல். ....
Tag: எஸ்.எஸ்.மகாதேவன்
எனது முற்றத்தில்- 18
அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான். டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள் மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.....
எனது முற்றத்தில்- 17
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மாதம் ஒரு சுபாஷிதம் வீதம் சொல்ல ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் ஸ்வயம்சேவகர்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே சமுதாய ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமானா,ல் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் "அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி, நாஸ்தி மூலம் அனௌஷதம்; அயோக்ய புருஷஹ நாஸ்தி, யோஜகஸ் தத்ர துர்லபஹ" (மந்திரத்துக்கு ஆகாத அட்சரம் இல்லை, மருந்துக்கு ஆகாத மூலிகை இல்லை, தகுதி இல்லாதவன் என்று யாரும் கிடையாது; ஒருங்கிணைப்பு செய்வோர் கிடைப்பதே அரிது) என்ற சுபாஷிதம் சொல்வது சகஜம். ....
எனது முற்றத்தில்- 16
நெல்லை மாவட்டக் கடற்கரையோரம், இடிந்தகரை கிராமத்தில் 1969இல் ஏராளமான மீனவ கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினார்கள். பிரமாண்டமான சர்ச்சுக்கு எதிரே சின்னஞ்சிறு விநாயகர் கோயில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கோயிலுக்கு நேரில் சென்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீனவ சகோதர சகோதரிகள் மத்தியில் அருளுரை நிகழ்த்தினார். மீனவர்களை அந்த வட்டாரத்தில் பரதவர்கள் என்று குறிப்பிடுவார்கள். இதை சுட்டிக்காட்டிய சுவாமிகள் "நீங்களெல்லாம் பரதனின் வம்சத்தில் வந்தவர்கள். இது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்" என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டு அந்த மீனவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் அதைக் கண்ட இந்தத் துறவிக்கும் கண் கலங்கியது....
எனது முற்றத்தில்- 15
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள 'வடகிழக்கு பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் பசுவின் சாணத்தை 1,700 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் எரித்து அதை வடிகட்டியாக்கி கடல்நீரை வடிகட்டினால் பாக்டீரியா இல்லாத நன்னீர் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருப்பதாகத் தகவல். பாரத விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது உலகம் நாளை சந்திக்க இருக்கிற கடுமையான குடிநீர்ப் பிரச்னைக்கு கோமாதா புண்ணியத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ...
எனது முற்றத்தில் – 14
குருக்ஷேத்திர பகவத் கீதை முற்றோதல் நடத்திய ஆந்திர அன்பரைப் பற்றி சொல்லத் தொடங்கி அவர் குடும்பம் பற்றி விவரித்து … தமிழில் எழுதிக்கொண்டே போகும்போது, பாரத கலாச்சார வியாபகம் எவ்வளவு அபார சக்தி கொண்டது என்பது உறைத்தது. மாநில வேலிகள் எல்லாம் எங்கோ கரைந்து மறைய… (இந்த சம்பவச் சங்கிலியில் அமெரிக்காவும் ஒரு களம் என்பதால்) உலகு தழுவிய பாரதீய கலாச்சாரம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது. ....
எனது முற்றத்தில் – 13
ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள். ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே பேசியிருப்பார்கள். காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள். அடுத்து கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.
எனது முற்றத்தில் – 12
நாலு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? கதை என்றால் நீதி கட்டாயம் உண்டு. ஆனால் கதை முடிந்த பிறகுதான் நீதி அல்லது கருத்து வரும். இந்தப் பதிவில் மானுடன் ’கதை முடிந்த’ பிறகு என்ன என்பது பற்றித்தான் கருத்து. பொறுங்கள். அவசரப்பட்டு ஆவி உலகம் பற்றியோ என்று நினைத்து விடாதீர்கள்! விஷயமே வேறு. முதலில் கதைகளைப் படியுங்கள்.
எனது முற்றத்தில் – 11
’பாஞ்சாலி சபத’த்திற்கு பாரதியார் எழுதிய சமர்ப்பணத்தின் பின்வரும் பகுதி, தமிழின் சிரஞ்சீவித் தன்மையில் அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: "தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கு"....
எனது முற்றத்தில் – 10
குன்றக்குடி அடிகளார் என்று எழுபதுகளில் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய ஆதீனகர்த்தர் அவர்களை சென்னையில் அவரது மயிலை திருமடத்தில் நான் பேட்டி கண்டேன். அதனால் அவருடைய பின்வரும் வாக்கியத்தை1970களில் தியாகபூமி இதழில் பதிவு செய்ய முடிந்தது: "நான் மதத்தால் ஹிந்து, மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன்"....
எனது முற்றத்தில் – 9
தமிழக முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதி 1957இல் வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குள் இரண்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததன; விற்பனையில் சாதனை என்று மட்டுமல்ல, தமிழ் மண்ணின் ஆன்மிக தாகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்....
எனது முற்றத்தில் – 8
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர் சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப் பொறி தட்டியது. நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்?
எனது முற்றத்தில் – 7
....வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன் சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!...
யோகா: பாரதியார் பார்வையில்…
அடிமைப்பட்டிருந்த பாரத நாட்டில் மக்களுக்கு தன்னுடைய கவிதை / கட்டுரை / ஊடகப் பணி போன்ற எத்தனையோ வழிகளில் சுதந்திர வேட்கை ஊட்டியபடியே வாழ்ந்து மறைந்த (1882 - 1921) பாரதியாரைத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிகிறது. ரிஷி முனிவர்கள் மனிதகுலத்திற்குக் கண்டு சொன்ன யோக சாஸ்திரம் போன்ற எத்தனையோ விஷயங்களை எளிய நடையில் போகிறபோக்கில் பொதிந்து கொடுத்துவிட்டு போயிருக்கிற பாரதியாரை பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ...
எனது முற்றத்தில் – 6
பார்த்துப் பார்த்து பிள்ளைகளுக்கு பெற்றோர் பெயர் சூட்டுகிறார்கள். தாத்தாவின் பெயர் தாங்குகிற பேரனுக்குப் பெயரன் என்பதே சரியான பெயராம். மரியாதையால் தாத்தா பெயர் சொல்வதைத் தவிர்த்து, பெயர் சொல்லி அழைப்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்லப் பெயர் சூட்டுகிறார்கள். மக்கள் பெயர் வைப்பதில் வீட்டு அளவு காரணம் மட்டுமல்ல, நாட்டு அளவு காரணமும் பெரும் பங்கு வகிக்கிறது.....