ஜெர்மனியின் வெற்றி படிப்படியாகக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் 1941, ஜூன் மாதத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றது. அதுவரை ரஷ்யா ஜெர்மனியோடு ஒரு யுத்தமில்லா அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. ரஷ்யா எதைச் செய்தாலும் ‘ஆமாம்’ சாமி போடும் இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று தாக்கத் தொடங்கியதோ அப்போது நமது இந்திய கம்யூனிஸ்டுகள் தாங்கள் பாடிவந்த ராகத்தை மாற்றி, யுத்தத்துக்கு “மக்கள் யுத்தம்” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கலாயினர். ரஷ்யாவின் எதிரியான ஜெர்மனி பிரிட்டனுக்கும் எதிரி என்பதால், ரஷ்யாவுடன் ஜெர்மனியை எதிர்க்கும் பிரிட்டனுக்கு கம்யூனிஸ்டுகள் யுத்த ஆதரவு பிரசாரம் செய்யத் தொடங்கினர்...
Category: தொடர்
ஸ்வதந்திர கர்ஜனை- 2(17)
1940. முந்தைய ஆண்டில் துவங்கிய யுத்தம் ஐரோப்பாவில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இனி இந்த யுத்தத்தால் நடக்கப் போகும் அழிவுகளுக்கு ஹிட்லரே காரணம் என்று காந்திஜி கூறினார். என்னதான் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் கருணையின்றி நடந்து கொண்டாலும் இந்த யுத்தத்தில் தனது அனுதாபம் முழுவதும் இங்கிலாந்திடமும் அதனோடு இணைந்து போரிடும் நேச நாடுகளின் பக்கம்தான் என்றார் காந்திஜி.
மார்கழிப் பனித்துளி (1-3)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(16)
இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி விரிவான பல செய்திகளைக் கொடுக்க வேண்டும். ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல, நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி போர்! ஆம், போர் மட்டுமே” என்று முழங்கியவர் நேதாஜி.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(15)
1937-இல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூடிய வரை காந்திஜி சொன்ன செயல் திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் ராஜாஜி.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(14)
இந்திய நாட்டில் பழம்பெரும் ஸ்தாபனமாக விளங்குவது காங்கிரஸ். அதன் வயது இப்போது ஐம்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், ஆண்டுதோறும் நடத்துகின்ற மாநாட்டை மட்டும் நடத்தத் தவறியதே இல்லை. அது எங்கள் தேசிய கடமையாக இருந்து வந்திருக்கிறது. ‘காங்கிரஸ்’ எந்த ஜாதியாருக்கோ, மதத்தாருக்கோ அல்லது வேறு எந்த பிரிவினருக்கோ பிரதிநிதியாக இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும், நிலவும் அத்தனை கொள்கைகளுக்கும், எல்லா உரிமைகளுக்கும் பிரதிநிதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.....
ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)
சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது லாகூரில் ஒரு மாபெரும் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றார் லாலா லஜபதி ராய் என்பதை முன்பே பார்த்தோமல்லவா? அந்த ஊர்வலத்தைத் தடிகொண்டு தாக்கிய சார்ஜண்ட் ஜான் சாண்டர்ஸ் என்பான் லாலாஜியை கண் மண் தெரியாமல் மார்பில் அடித்ததில் அவர் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் கொடுமையை அறிந்த, அப்போது லாகூர் பல்கலைக் கழகத்தில் தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பகத் சிங், சுக்தேவ் தாபர், சந்திரசேகர ஆசாத், ஷிவ்ராம் ராஜகுரு எனும் நான்கு மாணவர்கள் லாலாஜியைக் கொன்றதற்கு பழிவாங்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
ஸ்வதந்திர கர்ஜனை – 2(12)
முந்தைய ஆண்டில் (1928) கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் தலைவர், அடுத்த ஆண்டின் (1929) தலைவர் அவர் திருமகனார் ஜவஹர்லால் நேரு. அதுவரை காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவருள் ஜவஹர்லால் தான் வயதில் மிகவும் இளையவர். லாகூர் காங்கிரசில் தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை அவர் மகன் ஜவஹர் வாங்கிக் கொண்ட காட்சியை பொதுமக்கள் அதிகம் விரும்பி ரசித்தனர்.
ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)
வயதில் முதியவரும் கூட்டத்தின் தலைவரும் பஞ்சாப் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவருமான லாலாஜியை சார்ஜண்ட் சாண்டர்ஸ் என்பான் தடிகொண்டு பலம் கொண்டமட்டும் தாக்கினான். அவன் அடித்த அடிகள் அவர் மார்பில் விழுந்தன. தொண்டர்கள் லாலாவை தடியடியிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. மிருக வெறியோடு சார்ஜண்ட் சாண்டர்ஸ் அடித்த அடியில் லாலா நினைவை இழந்தார். தொண்டர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நாள்களில் லாலாஜி உயிரிழந்தார்...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(10)
இந்தியர்களின் ஒரே கோரிக்கை ‘பரிபூரண சுதந்திரம்’, இதற்கு மாற்றாக எந்தவித சீர்திருத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சைமன் கமிஷனை இந்தியா முழுவதும் எதிர்ப்போம் என்றது சென்னை காங்கிரஸ். அதற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு பரபரப்பு நிலவியது. இங்கிலாந்திலிருந்து வரும் சைமன் கமிஷனை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்த எல்லா கட்சிகளும், தமிழ்நாட்டில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைவரும் ஒரே குரலில் ‘எங்கள் கோரிக்கை பரிபூரண சுயராஜ்யமே தவிர சீர்திருத்தங்கள் அல்ல, ஆகவே சைமனை எதிர்ப்போம் என்று உரக்கக் கூவினர்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)
நம்மில் பலர் ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்....
எனது முற்றத்தில்- 30
ஒரு சிறிய வட்டார விவசாயிகளின் ஹிந்து சமயச் சடங்கு இந்த அளவுக்கு பிரம்மாண்டமான திருவிழாவாக வடிவெடுத்து அபாரமான வணிக வாய்ப்புக்கு வகை செய்திருப்பதை பெங்களூர் எம்.பி.யும் பாஜகவின் அகில பாரத இளைஞர் அணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சுட்டிக்காட்டி, “லோக்கல் டு குளோபல் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லி வரும் கருத்துக்கு நேரடி உதாரணம் இது” என்று தனது ட்விட்டர் பதிவில் பாராட்டினார்...
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11
இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10
இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)
1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில் ‘கொடிப் போராட்டம்’ எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர். நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று.