பாஞ்சாலி சபதம் – 2.3.6

அவையில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு பீமன் பொங்கி எழுகிறான். தனது அன்னண் தருமனைப் பார்த்து, “மாதர் குல விளக்கை, பாஞ்சாலன் மகளை, திருஷ்டத்துய்மன் சகோதரியை, போரில் வென்று கைத்தலம் பற்றிவந்த காரிகையை சூதில் பணயம் வைத்தது ஏன்?” என்று சினத்துடன் வினவுகிறான். இறுதியாக, “இது பொறுப்பதில்லை - தம்பி! எரிதழல் கொண்டுவா. கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று கர்ஜிக்கிறான் என்கிறார் மகாகவி பாரதி.

விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்!

திரு.ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்; முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர். 26.9.2013 அன்று தஞ்சாவூரில் விவேகானந்த ரதத்தை வரவேற்று ஜி.கே.வாசன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது.

பாரதியும் பாரதிதாசனும் – 3 இ

பாரதியின் நாட்டுப் பற்று - நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் - நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் - கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்....

பாஞ்சாலி சபதம் – 2.3.5

நியாயம் சொல்ல வந்த பீஷ்மரும் துரியன் பக்கம் நிற்பது பாஞ்சாலிக்குத் தெளிவாகிறது. “சீதையைக் கடத்தி வந்த ராவணனை அவனது அவையில் இருந்தோர் பாரட்டினார்களாம். அதுபோலிருக்கிறது உங்கள் செய்கை” என்கிறாள். மண்டபம் கட்டி அழைத்து வந்தது எங்கள் அரசாட்சியைப் பிடுங்கத் தானா என்று கேட்கிறாள். ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்று ஒரு வேறொரு பாடலில் பாரதி பாடுவது உண்மைதான் என்பதை அவையில் பாஞ்சாலியின் தர்க்கம் காட்டுகிறது. “பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறாள். கொடுமை கண்டு எதிர்க்கத் திறமில்லா, நாணமற்ற அவையினரைப் பார்த்து.

விவேகானந்தரின் குரல்

பத்திரிகையாளர்  திரு. டி.ஐ.அரவிந்தன்,  ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.

விழித்தெழும் பாரதமே! (கவிதை)

இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.

பாஞ்சாலி சபதம் – 2.3.4

பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாட்டனாரான பீஷ்மர் பாஞ்சாலியின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். “முன்னாளில் ஆணும் பெண்ணும் சமம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. இப்போது மனைவியை அடிமையாக விற்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. உன்னை சூதில் பணயம் வைத்து உன் கணவன் தருமன் தோற்றுவிட்டான். நான் என்ன செவது?” என்கிறார் அவர். “தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்” என்கிறார் மகாகவி பாரதி...

சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்

பேராசிரியர்  திரு. இரா. ஸ்ரீநிவாசன்  மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

மொக்கச்சாமியை உங்களுக்குத் தெரியுமா?

‘மாயி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் சரத்குமாரும் வடிவேலுவும் திருமணத்திற்காக பெண் பார்க்கப் போவார்கள். பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைக்க, அந்தப் பெண் மின்னல் போல சடக்கென்று இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவாள். அப்போது வடிவேலுவின் ரியேக்‌ஷன் பட்டையைக் கிளப்பும்..... யார் இந்த மொக்கச்சாமி?

பாஞ்சாலி சபதம் – 2.3.3

குலைந்த நிலையில் இருந்தாலும், அழுது அரற்றினாலும், துருபதன் மகள் பாஞ்சாலியின் தீரம் குறையவில்லை. அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, வேள்வித்தீ முன்னர் கைத்தலம் பற்றிய தனது கணவர்களைப் பார்த்து இதற்காகவா உங்களை மனம் செய்தேன்? என்று அவையில் வினவுகிறாள் பாஞ்சாலி. இதனை “பாண்டவரை மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.” என்று மகாகவி பாரதி குறிப்பிடுகிறார். அதாவது சுடும் பார்வை. அவளை தாதியென்று துச்சன் ஏச, கர்ணனும் சகுனியும் சிரிக்கிறார்கள். “சபையினோர்? வீற்றிருந்தார்!” என்கிறார் மகாகவி. அதாவது மனிதம் மறந்து மரத்துக் கிடந்தது அந்த அவை.

பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை

வரலாற்றுத்துறை பேராசிரியரான திரு. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, 2013, செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில், ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. இரா.குப்புசாமி ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

மார்கழிப் பனித்துளி (8-13)

‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை 6 கவிதைகள்....

மகாவித்துவான் சரித்திரம் -2(12)

.... பிள்ளையவர்கள் தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரிய புராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்ப ராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, "இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!" என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம்....

பாஞ்சாலி சபதம்- 2.3.2

பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதி கோபத்தின் உச்சிக்குச் செல்லுமிடம் இக்கவிதை தான். தனது கணவரின் தாயாதியானாலும், துச்சனை தம்பி என்றே அழைக்கிறாள் பாஞ்சாலி. அவனுக்கு பல புத்திமதியும் கூறுகிறாள். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; - உன்னை  ஆள்பவன் அண்ணன் சுயோதனன்’ என்று கூறி அவளது மொய்ங்குழல் பற்றி இழுத்துச் செல்கிறான். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளே இல்லாமல் மக்கள் பரிதாபமாக வேடிக்கை பார்த்ததை நெஞ்சு கொதிக்க கவிதையாகத் தீட்டுகிறார் மகாகவி. “ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள்....” என்று கூறும் அவர், “நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?” என்று ஆவேசம் கொள்கிறார்...

மீண்டும் அவதரித்து வாருங்கள் சுவாமி!

கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. வெ.இன்சுவை. பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதுகிறார். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இது...