தேவி வழிபாடு- 10

-திருநின்றவூர் ரவிகுமார்

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெற்றது. இன்று பத்தாம் நாளான விஜயதசமியுடன் இத்தொடர் நிறைவுறுகிறது…

10. விஜயதசமீ

இந்த ஆண்டு சைலபுத்ரி தொடங்கி ஸித்திதாத்ரி வரை நவதுர்கை வடிவங்களை குருவருளால் சிந்தித்தோம்.

नवीकृताकारधराऽपि याऽनवीकृताऽविकारापि विकाररूपिणी ।
विसर्गरूपाऽप्यविसर्गरक्षणोन्मुखी सदा रक्षतु सा नवात्मिका ॥

நவீக்ருʼதாகாரத⁴ரா(அ)பி யா(அ)னவீக்ருʼதா
(அ)விகாராபி விகாரரூபிணீ ।
விஸர்க³ரூபா(அ)ப்யவிஸர்க³ரக்ஷணோன்முகீ² 
ஸதா³ ரக்ஷது ஸா நவாத்மிகா ॥

பொருள்: தேவியானவள் பக்தர்களை காக்க புதுப்புது ரூபங்களை எடுத்தாலும் அவள் என்றும் மாறாதவள்; ஸநாதனீ (எப்போதும் இருப்பவள்). அண்டங்களை அழிக்க வடிவம் கொண்டாலும், நவதுர்கையானவள் எப்போதும் உலகங்களை காக்க எண்ணம் கொண்டவள்.

தந்திரங்களில் வேறுவிதமாக நவதுர்கையின் வடிவங்கள் பின் வருமாறு கூறப்படுகின்றது.

दुर्गे शूलिनि जातवेदसि महाशान्त्याह्वये शाबरि
ज्वालादुर्गवराभिधे लवणगे दीपाभिधे ह्यासुरि ।
एह्यम्बे पुरतो ममाद्य भयकृद्रोगारि पीडादिमान्
विध्वस्तान् कुरु देहि सौख्यमतुलं भक्तिं तथाऽव्याहताम् ॥

து³ர்கே³ ஶூலினி ஜாதவேத³ஸி 
மஹாஶாந்த்யாஹ்வயே ஶாப³ரி
ஜ்வாலாது³ர்க³வராபி⁴தே⁴ லவணகே³ 
தீ³பாபி⁴தே⁴ ஹ்யாஸுரி ।
ஏஹ்யம்பே³ புரதோ மமாத்³ய 
ப⁴யக்ருʼத்³ரோகா³ரி பீடா³தி³மான்
வித்⁴வஸ்தான் குரு தே³ஹி ஸௌக்²யமதுலம்ʼ 
ப⁴க்திம்ʼ ததா²(அ)வ்யாஹதாம் ॥

அவையாவன:

  • 1. வனதுர்கை
  • 2. சூலிநீ துர்கை
  • 3. ஜாதவேத துர்கை
  • 4. சாந்தி  துர்கை
  • 5. சாபரீ  துர்கை
  • 6. ஜ்வாலா  துர்கை
  • 7. லவண  துர்கை
  • 8. தீப  துர்கை
  • 9. ஆஸுரீ துர்கை

குருவருள் கூடி வருகையில் பின் ஒரு சமயம் அதைப் பற்றி சிந்திப்போம்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

(நிறைவு)

$$$

Leave a Reply