கார்த்திகை தீபம்: முந்தைய நிலைப்பாடே தொடர்கிறதா?

உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு கேள்வி

புதுதில்லி, அக். 1: ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாடே தொடர்கிறதா? அல்லது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் அக். 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், முந்தைய அரசின் நிலைப்பாட்டையே, தற்போதைய அரசும் கொண்டிருக்கிறதா? அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் செய்யவில்லையா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘முந்தைய நிலைப்பாடே தொடர்கிறது; அதில் மாற்றம் இல்லை’ என்றார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் தமிழக அரசு உட்பட அனைத்து மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கு விசாரணையை வரும் நவ.17க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  • நன்றி: தினமலர் (02.10.2026)

$$$

Leave a Reply