இந்தியா (04.05.1907) சித்திர விளக்கம்

இந்தியா - 04.05.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

இந்தியா (27.04.1907) சித்திர விளக்கம்

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் தொடக்கம். இங்கு இந்தியா (27.04.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது...

உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 3)

திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். சென்னையில் 1941–இல் நிகழ்ந்த சான்றோர் ஒருவரின் மணிவிழாவில் திரு.வி.க. நிகழ்த்திய உரை இது என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுவே உண்மை. திரு.வி.க.வின் அந்த உரையே பின்னாளில் ‘உள்ளொளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு நூலானது. இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது மூன்றாவது பகுதி...

சைவ சமயத்தில் மொழிப்போர் -மதிப்புரை 

சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்தி பிள்ளை (1897 - 1971) அவர்கள், தனது காலத்தில் ஆரிய- திராவிடப் புரட்டுக்கு எதிராகவும் நாத்திக இயக்கங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகவும் களமாடிய சைவ சித்தாந்தப் பேரறிஞர். அவரது ஐம்பதாவது நினைவு ஆண்டில், நண்பர் நெல்லை சொக்கலிங்கம், அவரது படைப்புகளைத் திரட்டித் தொகுத்து அற்புத நூலாக்கி இருக்கிறார். அந்த நூல் குறித்த, எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் மதிப்புரை இது.

உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 2)

திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். சென்னையில் 1941–இல் நிகழ்ந்த சான்றோர் ஒருவரின் மணிவிழாவில் திரு.வி.க. நிகழ்த்திய உரை இது என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுவே உண்மை. அந்த அளவுக்கு அன்றைய சான்றோர் உரைக்கும் திறனையும் மக்கள் கேள்வித் திறனையும் பெற்றிலங்கினர். பட்டிமன்றம் என்ற பெயரில் இப்போது கூத்தடிக்கும் நமது இன்றைய கையறு நிலையை ஒப்பிட்டுக் கொள்ளவும். திரு.வி.க.வின் அந்த உரையே பின்னாளில் ‘உள்ளொளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு நூலானது. இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. இதனை அரசி புக் டிப்போ, மயிலாப்பூர், சென்னை வெளியிட்டுள்ளது. சுமார் 200 பக்கங்கள் கொண்ட இந்நூலின் அன்றைய விலை: ரூ. 4.50. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது இரண்டாவது பகுதி...

உள்ளொளி -திரு.வி.க. (பகுதி- 1)

தொன்மையான தமிழ்மொழியில் உரைநடை செம்மை வடிவம் பெற்றது சென்ற நூற்றாண்டில்தான். பதிப்பாசிரியர்களின் இலக்கிய உரைகளில் நமது உரைநடை துவங்கினாலும், வள்ளலாரிடம் தான் நமது உரைநடை எழில் கொள்ளத் துவங்கியது என்பது ஆய்வாளர்கள் கூற்று. சென்ற இரு நூற்றாண்டுகளில் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாத ஐயர், ராகவ ஐயங்கார், மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், மகாகவி பாரதி, திரு.வி.க, கல்கி, கி.வா.ஜ., மு.வ., முதலானோர் அதனை மேம்படுத்தினர். தமிழ் உரைநடையில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவகை நடை உண்டு. தமிழ் உரைநடை வரலாற்றில் திரு.வி.க. அவர்களின் எழுத்து தெள்ளுதமிழ் நடை அற்புதமானது. தவிர, திரு.வி.க.வின் நடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக இங்கு வெளியாகிறது.

பாரதியும் உலகமும் – தூரன்

மகாகவி பாரதியின் இலக்கியங்கள் குறித்த ஆய்வு தமிழகத்தில் தனியே  பாரதியியலாகவே வளர்ந்துள்ளது. பாரதியின் எழுத்துகளை செம்மைப்படுத்துதல், பதிப்பித்தல், அவரது படைப்புகளை வரிசைப்படுத்துதல், விடுபட்ட படைப்புகளைக் கண்டறிதல், அவற்றின் இலக்கியச் சுவையை எடுத்துரைத்தல், திறனாய்வு என, பல ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்; இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வாளர்களுள் அமரர் திரு. ம.ப.பெரியசாமி தூரன் முன்னோடியாவார்.

திரு தூரனின் ‘பாரதியும் உலகமும்’ என்ற இந்த நூல், பாரதியின் படைப்புகளில் அவரது உலகு தழுவிய பார்வையைத் தரிசித்து, அதனை தமிழ் மக்களுக்குத் தரும் ஓர் இனிய முயற்சி. வானதி பதிப்பகம் 1979இல் வெளியிட்ட இந்நூல் பாரதி அன்பர்கள் சுவைப்பதற்கான, தேர்ந்தெடுத்துக் கோர்த்த கனிகளாலான மணியாரம்.

போர்ச்சூழலில் உலகம் அச்சத்துடன் தவிக்கும் தற்போதைய அவல நிலையில், உலகையே அன்பால் அரவணைக்கும் பாரதீயப் பார்வையை முன்வைக்கும் பாரதியின் இந்தப் படைப்புகள் முக்கியமானவை; இன்றைய தருணத்தில் அனைவராலும் படிக்கப்பட வேண்டியவை.

தேசிய கீதங்கள் – பாரதி

மகாகவி பாரதியின் தேசியப் பெருமிதம் விம்மும் பாடல்கள் இவை. அவரது ‘தேசிய கீதங்கள் என்ற தொகுப்பில், இந்த முதல் பகுப்பில் 19 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இலக்கியத்தின் எதிரிகள் – ம.பொ.சி.

நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் (1950களில்) தமிழகத்தின் பாரம்பரியம் காக்க, திரு.ம.பொ.சிவஞான கிராமணியார், தனது எழுத்தாற்றலை ஆயுதமாக்கிப் போராடினர். அவரது எழுத்தாற்றலின் சீரிய திறனுக்கு 'இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற இந்த நூல் ஓர் உதாரணம். ‘தமிழ் முரசு’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.

சந்திரிகையின் கதை – பாரதி

மகாகவி பாரதியின் இறுதிப் படைப்பு ‘சந்திரிகையின் கதை’.  ஆனால், இது முற்றுப்பெறுவதற்கு முன்னமே, பாரதியின் வாழ்வு முற்று பெற்றுவிட்டது. அதன் காரணமாக, தமிழ் மொழி ஓர் அற்புதமான இலக்கியத்தை இழந்துவிட்டது. சுதேசமித்திரன் வார இதழில் தொடராக வந்த இந்தப் புதினம், அவரது அகால மறைவால் முற்றுப் பெறாமல் போய்விட்டது. எனினும், மகாகவி பாரதியின் பன்முக தரிசனத்துக்கு அவரது முற்றுப் பெறாத இந்த இறுதிப் படைப்பு ஒளிவீசும் மகுடமாகத் திகழ்கிறது. தனது தத்துவ விசார நாட்டம், நையாண்டி செய்யும் நளினம், நகைச்சுவை உணர்வு, இலக்கியப் பரிச்சயம், மனிதநேய சிந்தனைகள் ஆகியவற்றின் கதம்பமாக இதனைப் படைத்திருக்கிறார் பாரதி.

அகமே புறம் – வ.உ.சி.

ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற சுய முன்னேற்ற நூலை, சுதேசி நாயகரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். தமிழின் சுய முன்னேற்ற நூல்களில் இதுவே முன்னோடி. அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது…

சிகாகோ பேருரைகள்- விவேகானந்தர்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893 செப்டம்பர் 11- 27 இல் நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவை மாநாட்டில், ஆறு நாட்களில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து மதத்தின் சிறப்பையும் நிலைநாட்டியவை. அந்த உரைகள் இங்கே...

வாழ்க தமிழ் மொழி! – பாரதி

தமிழ்மொழி குறித்த மகாகவி பாரதியின் பெருமிதப் பாடல்கள் இவை. மகாகவி பாரதியின் கவிதைகளில், தேசபக்திப் பாடல்கள் தொகுப்பில், தமிழ்நாடு என்ற இரண்டாம் பகுப்பில் அடங்கியுள்ள 6 தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்கள் மட்டும் இங்கே தனித்து வழங்கப்பட்டுள்ளன....

இனிய அறிவிப்பு

உலகெலாம் பதிப்பகத்தின் மையத் தளமாக ‘பொருள் புதிது’ என்ற இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. தமிழில் நல்ல நூல்களை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் திருப்பூரில் துவங்கப்பட்டுள்ள இப்பதிப்பகத்தின்  தகவல்கள், செய்திகள், நூலாக வெளியாக உள்ள கட்டுரைகள், கவிதைகள், தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் விவரங்கள் உள்ளிட்டவை இத்தளத்தில் வெளியாகும்... ’சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற மகாகவி பாரதியின் ஆணையே எம்மை வழிநடத்தும் பெருமுழக்கம்.