திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…
Tag: விவேக மலர்
ஆச்சார்யர் நரேந்திரர்!
திரு. திருநின்றவூர் கே.ரவிகுமார், சென்னையில் வசிக்கிறார்; அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தர் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ‘பிரபுத்த பாரத’ குழுவில் உறுப்பினராக இருந்தவர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர். ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…
சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய கண்ணோட்டம்
பேராசிரியர் திரு. கே.குமாரசாமி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வட தமிழகத் தலைவர். மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கல்வி மைய உறுப்பினராகவும், ராசிபுரம் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…
விவேகானந்தம்
திரு. கவிக்கோ ஞானச்செல்வன், தமிழகம் அறிந்த புலவர், சென்னையில் வசிக்கிறார்; தமிழாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சிறந்த எழுத்தாளர். ‘பாரதி வாழ்கிறார், நீங்களும் கவிஞராகலாம், அர்த்தமுள்ள அரங்குகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமணிக்கதிரில் வெளியான ‘பிழையின்றித் தமிழ் எழுதுவோம்’ தொடர் தமிழ்மொழி மீதான இவரது பற்றை வெளிப்படுத்தும். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது….
ஏழையே தெய்வம்!
பேரா. திரு. இரா.வன்னியராஜன், திருவேடகம் விவேகானந்த குருகுலக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் உறித்த கட்டுரை இது…
விவேகானந்தர்: எண்ணத்தை இயக்கமாகிய ஆன்மிக வழிகாட்டி
முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
“கொடுப்பதைக் கொடுத்து விடுங்கள்”
திரு. படுதலம் சுகுமாரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர்; கார்ட்டூனிஸ்ட்; சிறுகதை ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
அன்பே சிவம்
தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்திவந்த அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் விவேகானந்தம் குறித்த இரண்டாவது கட்டுரை இது….
அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!
2012, ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரை இது...
வீரத் துறவி (கவிதை)
நாமக்கல் கவிஞர் திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை, மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதை உலகில் கோலோச்சியவர்; தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்; தமிழகத்தில் தேசியம் வளர்க்க பாடுபட்டவர். 1863-ஆம் ஆண்டு மகர சங்க்ராந்தி நன்னாளில் (அன்று ஆங்கிலத் தேதி: 1863, ஜன. 12) அவதரித்த சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய நாமக்கல் கவிஞரின் கவிதை இங்கே வெளியாகிறது….
விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்!
திரு.ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்; முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர். 26.9.2013 அன்று தஞ்சாவூரில் விவேகானந்த ரதத்தை வரவேற்று ஜி.கே.வாசன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது.
விவேகானந்தரின் குரல்
பத்திரிகையாளர் திரு. டி.ஐ.அரவிந்தன், ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.
சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்
பேராசிரியர் திரு. இரா. ஸ்ரீநிவாசன் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை
வரலாற்றுத்துறை பேராசிரியரான திரு. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, 2013, செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில், ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. இரா.குப்புசாமி ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.
மீண்டும் அவதரித்து வாருங்கள் சுவாமி!
கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. வெ.இன்சுவை. பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதுகிறார். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இது...