பகலவனே வாழி!

திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....

புதிய பாரதம் தலையெடுக்க….

திரு. ச.சிவசுப்பிரமணியன் கணக்குத் தணிக்கையாளர். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் தலைவர். பல்வேறு ஆன்மிக அமைப்புகளிலும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலும் செயல்படுபவர். 2சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்ட அன்னாரது கட்டுரை இது…

எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!

‘பாரத ரத்னா’ மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பாரதத்தின் 11-வது ஜனாதிபதியாக இருந்தவர்; இளைஞர்களின் எழுச்சி நாயகர். சுவாமி விவேகானந்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் கலாம். அன்னாரது உரை இங்கே கட்டுரை வடிவில் வெளியாகி இருக்கிறது….

விவேகானந்தர் – குழந்தைப்பாடல்

‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...

வீர நரேந்திரா விவேகானந்தா! (கவிதை)

சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....

பாவி என்பதுதான் பாவம்

ஹிந்துக்களின் பாவ- புண்ணியக் கோட்பாட்டிற்கும், கிறிஸ்தவர்களின் பாவக் கோட்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்? சுவாமி விவேகானந்தரின் வழியில் விளக்குகிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

காவியில் பூத்த கனல்

திரு. ஆர்.பி.சாரதி ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரின் பொருளாதாரச் சித்தாந்தம்

திரு. வானமாமலை, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வெளிவந்த  ‘சுதேசி செய்தி’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்ன்னாரது கட்டுரை இங்கே…

புகழையும் துறந்த துறவி

மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...

ஆரிய – திராவிட இனவாதம் குறித்து விவேகானந்தர்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதிய அற்புதமான கட்டுரை இது....

சுவாமிஜியின் பெருந்தன்மை!

திருமதி கே.பத்மாவதி, தொலைதொடர்புத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசிக்கிறார்; தகவல் தொழில்நுட்ப வல்லுனரான காம்கேர் கே. புவனேஸ்வரியின் அன்னை;  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும்  சென்னை ‘ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை’யின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே….

அறியாமை, வறுமை அகல வழிகாட்டியவர் சுவாமிஜி

திரு. கே.முத்துராமகிருஷ்ணன், திருச்சி அருகே லால்குடியில் வசிக்கிறார். சிறுவயது முதற்கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் தொண்டர்; ராமகிருஷ்ண மடத்தின் மந்திர தீட்சை பெற்றவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது (2013) சுவாமிஜி குறித்த இவர் எழுதிய கட்டுரை இங்கே…

விவேகாநந்த வெண்பா (கவிதை)

திரு. ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், ஆன்மிக நாட்டம் கொண்ட எழுத்தாளர், கவிஞர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் மீதான வெண்பாக்கள் இவை….

சுவாமி விவேகானந்தர் பார்வையில் உண்மையான ஆன்மிகம்

திரு. தெள்ளாறு கோ.ராமநாதன், ஆன்மிக எழுத்தாளர்; சர்வோதய இயக்கத்தில் திரு. எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு பிரசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்; தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்; 13 நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

விவேகானந்தரின் பன்மொழிப் புலமை

பொருள் புதிது- இணையதள ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய, சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...