சிவகளிப் பேரலை- 56

     ஆடலரசனாகிய நடராஜனின், சிவபெருமானின் பெருமையை இந்த ஸ்லோகமும் எடுத்தியம்புகிறது. ...

சிவகளிப் பேரலை – 55

     சிவபெருமானின் நடனம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது மகான்களின்  வாக்கு. அவன்தான் தானும் ஆடி, நம்மையும் ஆட்டுவிக்கிறான். அவனது ஆடல் மகிமையை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது....

சிவகளிப் பேரலை – 54

முந்தைய ஸ்லோகத்தில் மயிலுக்கும் மகேஸ்வரனுக்கும் சிலேடை அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் இடி, மின்னலுடன் மழை பொழிகின்ற மேகத்தைப் பார்த்ததும் பெண் மயிலுக்கு முன்பாக ஆண் மயில் தோகை விரித்து ஆனந்தமாக நடனமிடுவதுபோல், சந்தியாகாலத்திலே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். ....

சிவகளிப் பேரலை – 53

மல்லிகையையும் அதனை விரும்புகின்ற வண்டையும் அடுத்தடுத்து சிவபெருமானுக்கு சிலேடையாக அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், அடுத்தபடியாக மேகத்தையும் அதனை விரும்புகின்ற மயிலையும் சிவபெருமானோடு இணைத்து இரட்டுற மொழிந்துள்ளார். ....

சிவகளிப் பேரலை – 52

இந்த ஸ்லோகத்தில் மேகத்தோடு சிவபெருமானை இணைத்து சிலேடை புனைந்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப் பேரலை – 51

பிரணவ நாதத்துடன் ஓங்கி நிற்பவர் சிவபெருமான்.  அவரது மேனி மிகுந்த சிவப்பு அல்லது மிகுந்த வெண்மை நிறம் கொண்டது. மதனன் எனப்படும் காமதேவனை பார்வையாலேயே நெருப்பு மூட்டி அழித்தவர் சர்வேஸ்வரன். அவர், பூப்போன்ற மனத்தையுடைய தேவர்களை மிகவும் விரும்புபவர். ஸ்ரீசைலம் போன்ற மலைப் பிரதேசங்களிலே கோவில் கொண்டிருப்பவர்.....

சிவகளிப் பேரலை – 50

சிவானந்த லஹரியை ஆதிசங்கரர் அருளிச்செய்த ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் சிவபெருமான், மல்லிகார்ஜுனராகவும், அம்பாள் பிரமராம்பிகையாகவும் அருள் பாலிக்கிறார்கள். இந்த 50-வது ஸ்லோகம், மல்லிகைக்கும், மல்லிகார்ஜுனருக்குமான சிலேடை. ...

சிவகளிப் பேரலை – 49

தோட்டத்திலே பாத்தி கட்டி, அதற்குள் நீருற்றி, ஒரு கம்பை (கழியை) நட்டு கொடியை வளர்ப்பார்கள். அந்தக் கழிமீது கொடி படர்ந்து,  மேலே பந்தல் மீதேறி வளர்ந்து, பூப்பூத்து, காய் காய்த்து, கனி தரும். அதுபோல சிவ பக்தியாகிய கொடி, முக்தியாகிய பழத்தை, பக்தனுக்குத் தருகின்றது என்பதை விளக்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை – 48

சிவத்தியானம் என்பது வற்றாத நீர்நிலை. அங்கே சிவனருளால் மகிழ்ச்சியாகிற நீர் எப்போதுமே நிரம்பியிருக்கிறது. முனிவர்களும் தவசிரேஷ்டர்களுமான  தாமரைகள் சிவத்தியான நீர்நிலையையே தமது இருப்பிடங்களாகக் கொண்டுள்ளன(ர்). தூய மனம் கொண்டவர்கள் இதனையே நாடுகின்றனர்.  தேடி அடையப்படுகின்ற புண்ணியத்தை சிவத் தியான நீர்நிலை தருகின்றது. அனைத்து விதமான பாவங்களின் கறைகளையும் சுவடு தெரியாமல் இந்த நீர்நிலை போக்கிவிடுகிறது....

சிவகளிப் பேரலை – 47

ஓர் அரசன் ஓரிடத்தில் தங்குவதற்கு முன்பாக, அவனது பரிவாரங்களும், அரசனது பணிவிடைகளுக்கு வேண்டிய பொருட்களும் முன்கூட்டியே வந்து சேருமோ, அதுபோல இறைவனாகிய சிவபெருமான் பக்தனின் மனத்திற்குள் குடிபுகுவதற்கு முன்பாகவே, அவனது பாவங்கள் அழிந்து, நற்குணங்கள் அரும்பிவிடும் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை – 46

முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே  அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 45

பறவை அதன் குடும்பத்தோடும் இனத்தோடும் கூடி வாழ்கின்ற இடம் கூடு. அந்தக் கூடுதான், பறவைக்குப் பாதுகாப்பையும், சௌகர்யத்தையும், சுகங்களையும் தருகிறது. அதேபோல் பக்தனின் மனதாகிய பறவைக்கு, இறைவனின் திருவடிகளே சிறந்த சரணாலயம். ..

சிவகளிப் பேரலை – 44

சிங்கத்துக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாக இந்த ஸ்லோகத்தை உரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைச் சிங்கம் எனது மனக்குகையிலே வீற்றிருக்க, எனக்கு எவ்விதத்தில் அச்சம் வரும்? என்று கேட்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

சிவகளிப் பேரலை – 43

மகாபாரதத்திலே அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தருள, வேடனாகத்தான் அவன் முன்னர் சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு கிராதமூர்த்தி என்றும் பெயருண்டு. அப்பேர்பட்ட சிறந்த வேடனாகிய சிவபெருமான் வசிப்பதற்கு, உண்மையிலேயே சிறந்த வனம் எது தெரியுமா? பக்தனின் மனம்தான்....

சிவகளிப் பேரலை – 42

ஆழம் காணவியலாத பக்தி என்ற நீர் நிறைந்த அகழியும், அந்த பக்தியிலே அசைவிலாத உறுதி என்ற தன்மை வாய்க்கப் பெற்ற மதிலும், நற்குணங்களாகிய படைகளும், உடல் - மனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட உறுதி வாய்ந்த கோட்டைச் சுவர்களும், ஞானத்தையே நிறைவான பொருளாகவும் கொண்டது பக்தனின் மனதாகிய கோட்டை.  ...