அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…

ஈஷா தாக்கப்படுவது ஏன்?

கோவை, சிறுவாணி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகமையம் தமிழகத்தில் சிலரால் தொடர்ந்து தாக்கப்படுச்வது ஏன் என்று விளக்குகிறார், முகநூல் எழுத்தாளர் திரு. ராஜசங்கர் விஸ்வநாதன்….

ஏ.ஐ. தொழில்நுட்பமும் விஸ்வகர்மாவும்

ராஜ் கிஷன் பக்த் மேற்கோள் காட்டிய புத்தகத்தின் தலைப்பே (End of Work) விஷயத்தை சொல்லி விடுகிறது. இனி வரும் காலங்களில் மனித இனம் வேலை செய்ய வேண்டியது இல்லை. காரை நீங்கள் ஓட்ட வேண்டாம், உட்கார்ந்தால் போதும் தானே ஓடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்து விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எல்லாவற்றையும் எந்திரங்கள் செய்து விடும் என்கிறது அந்த நூல்.

பேரன்பு தான் கடவுள்!

நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் நம்மிடம் வந்து சேரட்டும் என்பது வேத வாக்கியம். இங்குள்ள கட்டுரை, யார் எழுதியது என்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனம் லேசாகி விட்டது. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டாமா? படியுங்கள்...

நெல்லை அளக்கும் பொழுது…

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் முகநூலில் எழுதிய பதிவு இது... நமது பாரம்பரிய அளவைகள் குறித்த கருவூலப்பதிவாக இங்கு வெளியாகிறது.

காத்திருக்க நேரமில்லை!

இந்த சுந்தர்ஜி யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க! முகநூலில் ‘நம் எண்ணங்கள்’ என்ற தனிப்பட்ட பக்கத்தில் அற்புதமாக, பேச்சுநடையில் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்களில் நீர் திரண்டுவிட்டது; விம்மல் வர யத்தனித்தது; ஏதோ ஒரு சோகம் தொண்டையை அடைத்தது. இந்த பாதிப்பு உங்களுக்கும் வர வேண்டாமா? இதோ இங்கே நகலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது அவரது பதிவு…

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.

பொய்யோ மெய்யோ?

நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். ..

ஒருபொருட் பன்மொழியும் சோறும்

திருமண விருந்து பந்திகளிலும் உணவகங்களிலும், மிகவும் சாதாரணமாக “ஒயிட் ரைஸ் கொண்டாருங்கள்” என்ற சொல்லாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதென்ன ஒயிட் ரைஸ்? வெள்ளை அரிசி? வேகவைக்கப்பட்ட அரிசியைத் தான் நாம் நாகரிகமாக (?) குறிப்பிடுகிறோம். உண்மையில் இதற்கு அழகான தமிழ்ப் பெயர் இருக்கிறது.

அயோத்யா பயணம் – ஓர் இனிய அனுபவம்

சேலத்தில் வசிக்கும் திரு. முரளி சீதாராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது அயோத்தி பயண அனுபவம் இங்கே பதிவாகிறது...

நந்தனார்  கதையில் கற்பனை ஏறிய கதை!

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

வாட்ராப்பும்  வைத்தமாநிதியும்- 2

சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap - உள்ளூருக்கு வத்திராப்பு - கற்றவனுக்கு வற்றாயிருப்பு.  இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள்  புரிந்து கொள்வோம். வாருங்கள். 

மலையாளம்- 2

“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.

மலையாளம்-1

ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’  என்று கேட்டார்.  ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’  என்று நம்பூரி கேட்டார்.  ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார்.  ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:-   ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.    

ராகவ சாஸ்திரியின் கதை

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-  “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.