கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.....
Category: கருவூலம்
விடுதலைப் போரில் அரவிந்தர்- 6
அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. "சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்" என்று அரவிந்தர் எழுதியிருந்தார்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(14)
இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.....
சத்திய சோதனை- 4(1-5)
கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். ....
விடுதலைப் போரில் அரவிந்தர்- 5
”வீழ்ச்சி அடைந்த இந்த இனத்தை தூக்கி நிறுத்தும் வல்லமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது உடல் வலிமை அல்ல, அறிவு வல்லமை. ஷத்திரிய சக்தி மட்டுமே வல்லமை அல்ல. பிராமண சக்தியும் உள்ளது. அது அறிவை அடிப்படையாகக் கொண்டது. இது எனக்கு புதியதாக ஏற்பட்ட உணர்வு அல்ல. இது நான் பிறக்கும்போதே என் எலும்பு மஜ்ஜையில் உள்ள உணர்வு. இறைவன் இந்த மாபெரும் விஷயத்தை சாதிப்பதற்காகவே என்னை உலகிற்கு அனுப்பியுள்ளார். எனக்கு பதினான்கு வயதிருக்கும்போது இந்த விதை முளைக்கத் தொடங்கியது. பதினெட்டு வயதில் அடித்தளம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டது”... அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் இவை....
பாலும் பழமும் கைகளிலேந்தி…
கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...
மகாவித்துவான் சரித்திரம்- 1(13)
சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும்.....
மகாவித்துவான் சரித்திரம்- 1(12)
ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். ...
விடுதலைப் போரில் அரவிந்தர்- 4
சமஸ்கிருதத்தை அவரே சுயமாக கற்கத் தொடங்கினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐசிஎஸ் படிப்புக்காக கிரேக்க, லத்தீன் மொழிகளை அப்படித்தானே கற்றார்? அதேபோல மற்றொரு செம்மொழியான சம்ஸ்கிருதத்தையும் தானே முயன்று கற்றார். எந்த அளவுக்கு என்றால், வேதத்தைப் படிப்பதுடன், அந்த புராதன பிரதியை தனது யோக கண்ணோட்டத்தில் புதுவிதமாக விளக்குமளவுக்கு அதில் வல்லமை பெற்றார். மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு இருந்த ஆர்வம் காரணமாக குஜராத்தி, மராட்டி, வங்க மொழி ஆகியவற்றில் திறம் பெற்றவரானார்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(11)
அவ்வக்காலத்திற் பிள்ளையவர்கள் தம் உள்ளத்தில் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த அரிய கருத்துக்களும் இனிய கற்பனைகளும் நிறைந்து விளங்கும் இத் தியாகராசலீலை தேனீக்கள் பல மலர்களில் உள்ள தேனைப் பலநாள் தொகுத்து அமைத்த தேனிறாலைப்போல உள்ளது. இவராற் செய்யப்பெற்ற முதற் காப்பியமாதலின் இதில் ஒரு தனியான அழகு அமைந்திருக்கின்றது. அக்காலத்திலே இவரோடு பழகிய பலர் இத் தியாகராசலீலைப் பாடல்களை அடிக்கடி அங்கங்கே எடுத்தெடுத்துப் பாராட்டி மகிழ்வதுண்டு.
சத்திய சோதனை- 3(20-23)
மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவை யாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால், நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால், இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பொருளை ஒரு கணமேனும் தரிசித்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்த சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும்.....
விடுதலைப் போரில் அரவிந்தர் -3
‘இந்தியா மஜ்லிஸ்’ என்பது இந்திய மாணவர்களுக்கான அமைப்பு. ஆரம்பத்தில் அது சோசியல் கிளப் போல தொடங்கப்பட்டாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சந்திக்கும் இடமாகியது. இந்திய அரசியல் பற்றிய கருத்துரைகளும் வாதப் பிரதிவாதங்களும் நடக்கும் இடமானது. அனல் பறக்கும் பேச்சுக்களும் கடுமையான மோதல்களை வெளிப்படுத்தும் அரசியல் விவாதங்களும் அங்கு தொடர்ந்து நடந்து வந்தன. அரவிந்தரும் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசியுள்ளார். அப்போது அவர் ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற ரகசிய அமைப்பில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக உழைக்க சபதம் எடுத்துக் கொண்டார். அவருடைய கருத்துக்கள் மிகவும் தீவிரமான அரசியலையும் ஆங்கிலேய அரசு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின. அந்த அமைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனாலும் ஆங்கில அரசு அதைக் கண்காணித்து வந்தது.....
மகாவித்துவான் சரித்திரம்- 1(10)
பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.....
விடுதலைப் போரில் அரவிந்தர் – 2
அரவிந்தர் 1879 முதல் 1893 வரை பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் இருந்தார். முதல் ஐந்தாண்டுகள் மான்செஸ்டரில், அடுத்த ஆறு ஆண்டுகள் லண்டனில், கடைசி மூன்றாண்டுகள் கேம்பிரிட்ஜில் இருந்தார். எப்போதாவது வீட்டில் இருந்து வரும் கடிதம், நாளிதழ்களில் வரும் செய்தி, கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஏற்பட்ட சில அறிமுகங்கள், என்பதைத் தவிர தாயகத்தோடு அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பாரதம் பற்றி, அதன் மக்கள் பற்றி, அதன் பண்பாடு பற்றி, சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் வளர்ந்தார். ”அந்த விஷயத்தில் முற்றிலும் அறியாமையில்தான் இருந்தேன்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்....
கயிற்றரவு
வாழ்வின் பொருளின்மையை சிறுகதைக்குள் அடக்க முயலும் புதுமைப் பித்தனின் மேதமையை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. கண்ணுக்குப் புலப்படும் வாழ்க்கை, கயிறா, அரவமா? கடிக்கும் வரை கயிறு... கடித்த பிறகு அரவம். இது அனுபவ ஞானம். ஆனால், அந்த அரவத்தைக் கயிறென்று துணிந்தே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. பொறுமையுடன் நிதானமாகப் படிக்க வேண்டிய வேதாந்தக் கதை இது...