-காலச்சக்கரம் நரசிம்மா
எழுத்தாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா, முகநூல் பதிவில் மிக முக்கியமான குடும்ப விஷயம் குறித்து எச்சரித்திருக்கிறார். அது இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது…

ஒரு செலிபிரிட்டி ஆக திகழ ஆசை இல்லாதவர் யார்? ஆனால் செலிபிரிட்டி ஆவதால் உள்ள ஆபத்துகளை உணர்ந்தால், அமைதியான வாழ்க்கையையே விரும்புவார்கள். செலிபிரிட்டியின் வாரிசுகள் சமூகத்தில் நடத்தப்படும்.
அண்மையில் ஒரு மிகப்புகழ் பெற்ற ஓர் ஓடவியலாளரின் மகன் , சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பார்த்ததும் மனம் பதைபதைத்து .
ஒரு விவிஐபி தனது தனிப்பட்ட புகழுக்காக செய்யும் ஸ்டண்டுகள் அவர்களது பிள்ளைகளின் மனநிலையை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்கிறீர்களா ?
“உன் அப்பா அந்த நடிகையோடு சுற்றுகிறாராமே” — என்று சக மாணவர்கள் ஒரு செலிபிரிட்டியின் வாரிசை நையாண்டி செய்தால், அந்த பிள்ளையின் மனம் என்ன பாடுபடும்?
நான் படித்த ஒரு பள்ளியில் ஒரு பிரபல நடிகையின் மகன் எட்டாம் வகுப்பு மகன் படித்தான். “உங்க அம்மாவைப் பற்றி ஒரு கிசுகிசு படித்தேன். அவ்வளவு கொடுத்தால், உங்க அம்மா வருவாங்களாமே”– என்று பள்ளியில் படிக்கும் பையன்கள் கேலி செய்ததால் , அந்த நடிகையின் மகன், அந்த பள்ளியில் இருந்து விலகி விட்டான் .
செலிபிரிட்டிகள் என்றாலே, பண்பு இல்லாதவர்கள் என்று நான் படித்த காலத்தில் பள்ளி ஆசிரியர்களே பேசுவார்கள்.
கொஞ்சம், நான் வகுப்பில் பேசினால் கூட, “நீ சினிமாக்காரன் பையன். உருப்படவில்லை என்றால் பரவாயில்லை . மற்றவங்க படிக்கிறதை ஏன் கெடுக்கிறே?”– என்று என்னிடம் கேட்ட ஒரு ஆசிரியை உண்டு. (அப்படி கேட்ட ஆசிரியை தான் பின்னாளில் , பள்ளி Cultural meeting கு என்னை தலைமை தாங்க அழைத்தார் என்பது வேறு விஷயம் )
நான் பல பள்ளிகளுக்கு Spoken English வகுப்புகள் எடுத்திருக்கிறேன் . ஆங்கிலத்தை நுனி நாக்கினால் பேச வேண்டும். குளிர் பிரதேசத்து மொழி. நம் தமிழ் போல, கடித்து, மென்று எல்லாம் பேச கூடாது. Spoken English வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். அமைதியாக ய இருந்தான். கொஞ்சம் depressed ஆக காட்சி அளித்தான். மற்ற மாணவர்களின் கேலி பேச்சுகளுக்கும், துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தான் .
“சார் ! அந்த பையன் இளங்கோ யார் தெரியுமா சார் ! அந்தத் தலைவரோட பையன்” ! ஆனால் A section பையன் இல்ல . B செக்ஷன் பையன்” என்று சொன்னவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சி. அந்தத் தலைவர் டெல்லியில் செல்வாக்குள்ள ஒரு தமிழக தேசிய கட்சி தலைவர். நானே அவரை எக்ஸ்பிரஸ்-காக பேட்டி எடுத்து உள்ளேன் . அவரது ரகசிய உறவுக்குப் பிறந்த பையன் . அந்தப் பையன் சரியாகப் படிக்காமல், மனநோயில் விழுந்து விட்டான். அதற்குப் பிறகு அவன் கதை என்ன ஆனது என்று கூட தெரியவில்லை .
செலிபிரிட்டிகளுக்கு நார்மல் வாழ்க்கை இருப்பதில்லை . தங்கள் இமேஜை கட்டிக் காப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, பிள்ளைகளுடன், பெண்களுடன் பேசுவதில்லை .
“உன் அம்மா நடிகையாமே ”– என்று சர்ச் பார்க்கில் தனது தோழிகள் கேலி செய்வார்கள் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் . வெண்ணிற ஆடை படத்தில் அருவியில் குளிக்கும் காட்சியை பள்ளி அருகிலேயே போஸ்டர் ஒட்ட, ஜெயலலிதாவின் நெருங்கிய பள்ளித் தோழியின் தாய், இனி ஜெயலலிதாவுடன் பேசக் கூடாது என்று தடை விதித்தார்களாம்.
விவிஐபி-யின் குழந்தைகள் படும் பாட்டை நான் அறிவேன். நான் பள்ளியில் படித்தபோது, இயக்குனர் ப.நீலகண்டனின் பேரன் விஜயகுமார் எனக்கு நெருங்கிய நண்பன். ஆனால் ஸ்ரீதரும், அப்பா சித்ராலயா கோபுவும் உரிமைக் குரல் படத்திற்கு பிரிந்த போது, அப்பா சித்ராலயா கோபு ஸ்ரீதர் எம்ஜிஆருடன் சேர்ந்தது பிடிக்காமல், கோபு விலகி விட்டார் என்று பத்திரிகையில் செய்தி வர, இதனால் , விஜயகுமார் மற்றும் எனக்கும் உள்ள நட்பையே உடைத்தார்கள், சக மாணவர்கள் .
என் அண்ணன் படிப்பில் சுட்டி. அவனுக்கு கல்லூரி படிப்பில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. காரணம் அவன் வாங்கிய மார்க். ஆனால் சினிமாக்காரர் அப்பா என்றதும் , அந்த ஸ்காலர்ஷிப்பை நீக்கி விட்டார்கள்.
அண்மைக்காலத்தில் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் , விவிஐபிக்களின் மறுபக்கம் என்கிற பெயரில், பணத்துக்காக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி, அந்தரங்கங்களைப் பற்றி, இல்லாததையும், பொல்லாததையும் பேசுவதால், அது குறித்த பின்னூட்டங்களில் ஆபாசமாக பேசப்படுவதால், அவர்களுடைய குடும்பங்களில் நேரும் அமைதியின்மையை அவர் கொஞ்சமாவது உணர்ந்திருப்பாரா ?
விவிஐபிக்களின் பிள்ளைகளை வசப்படுத்தி அந்த விவிபிக்களின் அந்தரங்க வாழ்க்கையைத் தோண்டி எடுக்கும் அவலம், அண்மைக்காலத்தில் நமது நாட்டில் பரவி வருகிறது.
அண்மைக்காலத்தில் இன்னொரு ஆபத்தான வழக்கம் பரவி வருகிறது. புகழ் பெற்ற செலிப்ரிட்டிகளின் மகன்கள், மகள்களை வைத்து குழந்தைகளை, இளைஞர்கள், influence செய்து வருகிறார்கள்.
Kid incluencers, யூத் influencers அதிகமாக சமூக ஊடகங்களில் நடமாடி, விவிஐபி பிள்ளைகளைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இந்த infleuncersன் target பிள்ளைகள் மற்றும் இளைய தலைமுறை .
அது மட்டுமல்ல, மிகவும் ஆபாசமான வீடியோக்களை எல்லாம் Kid influencers மூலம் பரவ விடுகிறார்கள். இந்த மாதிரி வீடியோக்களால் நமது அடுத்த தலைமுறையான பிள்ளைகளின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
விஜய் ஆட்சி நல்ல ஆட்சியா, இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் விவாதிப்பதை விட, அவர் ஆட்சியைப் பிடித்த விதம் தான் கவலைக்கு உரியதாக இருக்கிறது .
விஜய்யின் ஐடி விங் Kid influencers மூலம் குழந்தைகளை வளைத்து, பெற்றோரை விஜய் பக்கம் இழுத்திருப்பதாக , தகவல்கள் சொல்கின்றன. என்றால், குழந்தைகள் பெற்றோர் வசம் இல்லை , influencers வசம் என்று தெரிகிறது. இது மிகவும் அப்பத்தான் நிலை .
கொச்சியில் இருக்கும் எனது பழைய பெண் பத்திரிகையாளர் நண்பரிடம் இருந்து போன். என் குரலைக் கேட்டதும் அழத் தொடங்கினார். அவர் பிரச்சனை பெரும் பிரச்சனை. அவள் மகள், சமூக ஊடகங்களில் இருப்பவள். யாரோ அழகுக் குறிப்பு நிபுணர் சொன்னது போல உடலை நேர்த்தியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று டயட் முதற்கொண்டு , எல்லாவற்றையும் மாற்ற, அவர் கூறியபடி உடம்பை குறைத்துக் கொள்ள , கடைசியில் தான் அவளுக்கு தெரிய வந்ததாம் – அந்த அழகுக் கலை நிபுணர் , சமூக ஊடகங்களின் பகிர்ந்த அத்தனை புகைப்படங்களும் போட்டோ ஷாப் செய்யப்பட்ட படங்கள். அதை நம்பி அந்த பெண் தனது இயற்கை அழகை கெடுத்துக்கொண்டு, இப்போது depressionல் விழுந்து விட்டார் .
சீதைக்கு லட்சுமணன் கோடு போட்டு தாண்டாதே என்று சொல்லியும் அவள் தாண்டிச் சென்றாள் .
இப்போது சமூக ஊடகங்கள் நம்மை ஆக்ரமித்து விட்ட நிலையி ல் கோடு கிழித்து தாண்ட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. சமூக ஊடகங்கள் நம் வீட்டின் படுக்கை அறை வருகின்றன.
உங்கள் பிள்ளைகளை உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை influencers வசம் இருக்க விடாதீர்கள் .
கார்கில், பெஹல்கம், போர் சமயங்களில் இந்தியாவுக்கு எதிராக நமது நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பரவிய தேச விரோதப் பதிவுகளையே கண்டு கொள்ளாத மத்திய அரசு, அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியமான மனநிலையைப் பற்றியா கவலை கொள்ளப் போகிறது?
பெற்றோர்களே! குரங்குகள் தங்கள் குட்டிகளை சுமப்பது போல உங்கள் பிள்ளைகளை சுமந்து செல்லுங்கள். பூனை தனது குட்டிகளைக் காப்பது போல உங்கள் பிள்ளைகளின் மனநிலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். Celebrity ஆக வேண்டும் என்பதற்காக Values சை இழக்கக் கூடாது அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
It’s also important for parents to have conversations with children about the kind of aspirations that kidfluencers may promote, and how they can be contextualised among other important values.
Help your children find a between time spent on social media and engagement in other activities is key, ensuring the kids are exposed to a variety of life paths and aspirations. It’s good to use collaborative parenting techniques to form agreements about time spent on social media, and, if necessary, the type of accounts young people follow.
குழந்தைகளின் வயிற்றைக் கவனித்தால் போதாது. அவற்றின் சிந்தையை அதிக பாதுகாப்புடன் வைத்திருங்கள்.
$$$