கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1

தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே  ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.

நினைவாலே சிலை செய்து…

‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை  “திருக்கோயிலே ஓடி வா?” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும்.