மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு இந்தியா (30.03.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.