அசலும் போலியும்

ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.

பகவத் கீதை- எட்டாம் அத்தியாயம்

பிறவி, மறுபிறவி குறித்து எட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் கண்ணன் “என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை” என்று உறுதி அளிக்கிறார். அதாவது தான் கூறியபடி, பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து கடமையைச் செய் என்பதே இதன் உட்பொருள்....

வீரத்துறவி விவேகானந்தர்

சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் 2013, பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

இந்தியாவின் பல்கேரிய நண்பர் ரகோவ்ஸ்கி

‘உலக நாகரிகத்தின் தொட்டில் இந்தியா’ என்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் 1893 இல் முழங்கினார். அவர் இதைச் சொல்வதற்கு முன்னதாகவே ஒரு ஐரோப்பியப் புரட்சியாளர் இதை எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?  ஜார்ஜி  ரகோவ்ஸ்கி என்ற பல்கேரிய நாட்டுப் புரட்சியாளர் இதை தான் நடத்திய பத்திரிகையில் எழுதியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துகள்! (கவிதை)

அனைவருக்கும் இனிய சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் அளிக்கட்டும்! இறையருளால் தேசம் மேலும் உயரட்டும். உலகம் அமைதியை நோக்கி மீளட்டும்!

பகவத் கீதை- ஏழாம் அத்தியாயம்

“நீரினில் சுவை நான்; தீயினில் சுடர் நான்; வேதங்களில் பிரணவம் நான்; நானே உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறான் கண்ணன். தனது விற்போர் திறமை மீது கொண்ட அகந்தையால் போர்க்களம் வந்த விஜயன், போர்முனையில் குழப்ப மாயையில் தவிக்கும்போது, பார்த்தசாரதி, தனது மெய்யான சொரூபத்தைக் காட்டத் தயாராகிறார். “பலன் கருதாமல் கடமையைச் செய்” என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியவர், இந்த அத்தியாயத்தில், ”நானே உலகின் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று கூறி அவனது அகந்தையை உடைக்கிறார்.

புதியன பிறக்கட்டும்! (கவிதை)

இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்

காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.....

பகவத் கீதை- ஆறாம் ஆத்தியாயம்

முந்தைய அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம், துறவு ஆகியவை குறித்து விளக்கிய பார்த்தசாரதி, இந்த அத்தியாயத்தில் ராஜயோகமான தியானத்தின் சிறப்பை விளக்குகிறார்; “யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்” என்கிறார்....

இலக்கியாசிரியரின் மனைவி

1955-ஆம் ஆண்டு க.நா.சு. எழுதிய இச்சிறுகதை, ‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்பதை எளிதாக நிலைநாட்டுகிறது. இலக்கியாசிரியையின் கணவன் என்ற பெருமிதத்தை விட, இலக்கியாசிரியன் என்பது சற்று மாற்றுக் குறைவு தானே? இக்கதையைப் படித்து முடிக்கையில் உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தால், அதுவே இலக்கியாசிரியனின் பேறு!

சித்திரையே தமிழர்களின் புத்தாண்டு!

திரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்றுதொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற திமுக ஆட்சிக் காலத்தில் (2006- 2011) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதனை எதிர்த்த அறிஞர்களின் குரலாக ஒலித்தவர் திரு. எஸ்.ராமச்சந்திரன். ‘காண்டீபம்’ காலாண்டிதழில் இவர் எழுதிய அரிய கட்டுரை இது...

பகவத் கீதை – ஐந்தாம் அத்தியாயம்

செயலைச் செய்யாமல் துறப்பதை விட, செயலின் பலன்களைத் துறந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதே பிறவி நோக்கம் என்கிறார் பார்த்தசாரதி, ஐந்தாம் அத்தியாயத்தில். இன்பம் - துன்பம் என்ற இருமையை நீங்கியவனே சந்நியாசி. அத்தகையவன் “விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்” என்கிறான் கண்ணன்.

பாரதியும் விவேகானந்தரும் தீர்க்கதரிசிகள்

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓராண்டு ரத யாத்திரையின் நிறைவு விழா, கோவை பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில்  12, ஜனவரி 2014 22 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மறைந்த நடிகர் விவேக் (1961- 2021) பேசியதன் சுருக்கம் இது…

பகவத் கீதை- நான்காம் அத்தியாயம்

ஞான யோகம், கர்ம யோகம் குறித்து கூறிய கண்ணன் இவ்விரண்டின் பலன்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது (சந்நியாசம்) குறித்து நான்காம் அத்தியாயத்தில் பேசுகிறான். “நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்ற அமுதச் சொல் இந்த அத்தியாயத்தில் தான் முழங்குகிறது. “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்” என்ற, தமிழகத்தில் பலரால் தவறாக விளக்கம் அளிக்கப்படும் அமுதச் சொல்லும் இந்த அத்தியாயத்தில் தான் வருகிறது....

தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்!

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இங்கே…