சுவாமிஜியின் வாழ்விலே…

பத்திரிகையாளர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம், ‘தினசரி’ என்ற இணையதளத்தின் ஆசிரியர். அவரது தொகுப்பு இது...

விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி

அணுவியல் விஞ்ஞானியான திரு. சத்யேந்திரநாத் போஸ் (1874- 1974), மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கண்ணோட்டம் தொடர்பாக, எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரை இது…

விவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை

தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜின் சுவாமி விவேகானந்தர் குறித்த நான்காவது கட்டுரை இது…

சமயம் என்ன சொல்கிறது?

அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளராக இருந்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது…

இந்தியாவை எழுச்சி பெறச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்

பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின் துறவி. மதுரையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின்  தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...

காலம் கடந்தும் வாழும் துறவி

திரு. எஸ்.ஆர்.சேகர், கோவையில் வசிக்கும் தொழிலதிபர்; அரசியல், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; சட்டம் பயின்றவர்; பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொருளாளர்;  எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்து 2013-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…

துறவிகளில் மாறுபட்ட துறவி

திரு. ஈரோடு ஆ.சரவணன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரசார அணியின் தலைவராக இருந்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

உலகிற்கு வழிகாட்டும் சுவாமி விவேகானந்தர்!

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்; தினமணி நாளிதழில் பணியாற்றுகிறார். தினமணி இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது…

வெளிச்சம்

பேராசிரியர் மு.இராமச்சந்திரன், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  மதுரையில் வசிக்கிறார். தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலும், பட்டிமண்டப மேடைகளிலும் சொற்பொழிவாளராக தமிழ் வளர்ப்பவர்; ‘கம்பன்- சில தரிசனங்கள்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

விவேகானந்தர் பாய்ச்சிய மின்னொளி

முனைவர் திரு. அர.ஜெயசந்திரன், பார்வைத் திறனற்ற பேராசிரியர்; விழுப்புரத்தைச் சார்ந்தவர். பார்வையின்மையைக் குறைபாடாகக் கருதி வீழாமல், தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் வென்று காட்டியவர். இவர் தற்போது சென்னை, மாநிலக் கல்லூரியில், தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர். வள்ளலாரின் இலக்கியங்களில் பேருபதேசம், வள்ளலாரின் இலக்கிய உத்திகள், வள்ளலார் ஒருவரே வள்ளல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னோடித் தலைவரும், ‘விவேக பாரதி’ அமைப்பின் நிறுவனருமான திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இது.... சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக் கனலை இக்கட்டுரையில் நாம் தரிசிக்கிறோம்...

சுவாமி விவேகானந்தர் திருவடி வாழ்க! (கவிதை)

திரு. இராம.வேணுகோபால், ஆசிரியர்;  குடியாத்தத்தில் வசிக்கிறார். சித்த மருத்துவர்; பத்திரிகையாளர்; கவிஞர் எனப் பல பரிமாணங்களை உடையவர். ‘செந்தமிழ்க் கூத்தன்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். 2சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இது…

விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம்!

திரு. கோபாலகிருஷ்ண காந்தி, விடுதலைவீரர்கள் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்; இந்திய குடிமைப் பணியில் பல்லாண்டு பணியாற்றி, ஜனாதிபதியின் செயலாளராகவும் பணியாற்றியவர்; தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர்; மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர். சிந்தனையாளர், எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

விவேகானந்தரும் காந்தியும்

திரு. ஜக்மோகன் (1927 செப். 25 – 2021 மே 3) முன்னாள் அரசு அதிகாரி; முன்னாள் மத்திய அமைச்சர்; ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர்; பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இது…

மெய்ப்பொருள் காண்பதறிவு!

திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....