சூதாட்டத்தில் நாட்டை வைத்திழந்த தருமனிடம் அவனது சகோதரரை வைத்து ஆடினால், அதில் வென்றால் நாட்டை மீட்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறான் துரியன். அது கண்டு அவையினர் மருகுகின்றனர். ஆனால், யாருக்கும் துரியனை எதிர்த்துப் பேசும் துணிவில்லை. பீமனும், விஜயனும் நகுலனும் வேதனையில் வாட, அவர்களின் பின்னவனான சகாதேவன் ஊமை போலிருந்தான்; ஏனெனில் அவன் பின்னாளில் நடக்கப் போவதை முன் உணர்ந்தவன் (ஜோதிட வல்லுநன்) என்கிறார் மகாகவி பாரதி. “சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ் செய்தி காண” சகிக்காமல் அவையோர் தவிக்கின்றனர்..
Tag: பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – 2.1.5
அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது ...
பாஞ்சாலி சபதம் – 2.1.4
அறவுரை கூறி குருகுல இளவரசனைத் திருத்த முயன்ற விதுரன் தன் மீது பொழியப்பட்ட துரியனின் சுடுசொற்களால் மனம் நொந்த விதுரன், “சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?” என்று விரக்தியுடன் அவையில் அமைதியாவதாக எழுதுகிறார் மகாகவி பாரதி. மன்னர் திருதராஷ்டிரனும், பீஷ்மரும் இதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கையில் நான் நீதி சொல்லி என்ன பயன் என்றும் விதுரன் வருந்துகிறார்...
பாஞ்சாலி சபதம்- 2.1.3
முதல் பாக முடிவில், சூதில் பணையமாக நாட்டை வைத்து ஆடுமாறு சகுனி கூறியதைக் கண்டித்து அவையில் விதுரன் ஒருவரே பேசினார். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில், விதுரனுக்கு துரியன் ஆவேச மொழியில் பதில் அளிக்கிறான். “ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்” வைத்து, தின்ற உப்பினுக்கே நாசம் தேடும் நனி கெட்ட விதுரன் என்று தனது சிறிய தந்தையும் அமைச்சருமான விதுரனை ஏசுகிறான் துரியன். இப்போதேனும் தருமன் சூதை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதி வலியதாயிற்றே?
பாஞ்சாலி சபதம் – 2.1.2
இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குவதற்கு முன் கலைமகளையும் மகாகவி பாரதி பிரார்த்திக்கிறார். கலைமகளின் பேரருள் இடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞரின் வேண்டுதல்...
பாஞ்சாலி சபதம்- 2.1.1
யாரை எங்கு வைக்க வேண்டும், எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதெல்லாம் நமது முடிவல்ல; பராசக்தியின் லீலை. அதனைக் குறிப்பிட்டு, இரண்டாம் பாகம் எழுத ஆசி வேண்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.2.11
நல்லமைச்சனுக்கு அழகு மன்னருக்கு வரும் இடர் உரைத்தல். அதன்படி, சூதாட்டத்தின் திசைவழி பாண்டவர்களை அழிப்பதே என்பதை உணர்ந்த அமைச்சரும் சித்தப்பனுமான விதுரன், மன்னர் திருதராஷ்டிரனுக்கு இதனை இத்துடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறான். கெட்ட எண்ணம் கொண்ட துரியனால் குருகுலம் அழியப்போகிறது. அதைத் தடுக்காமல், “கேட்குங் காதும் இழந்துவிட்டாயோ?” என்கிறான். “நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் - நேரு மென்று நினைத்திடல் வேண்டா” என்று அறுதியிட்டு உரைக்கிறான். இவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரென்று தெரிந்திருந்தும் கூட. சூதாட்டச் சருக்கம் இங்கே நிறைவெய்துகிறது....
பாஞ்சாலி சபதம் – 1.2.10
விதிவழியில் சூதாட்டம் தொடங்கிவிட்டது. உடனே மகாகவி பாரதியில் கவிதை சந்தம் மாறுகிறது. சூதாட்டத்துக்கே உரித்த துள்ளலான நடையில் தருமனின் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார் கவி. சகுனி சார்பாக பணயம் வைக்கும் துரியனிடம் “ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?” என்று தருமன் கேட்டாலும், மருகன் என்பதால் தனக்கு உரிமையுண்டு என்கிறான் துரியன். அடுத்து மணிமாலை தொடங்கி, ஆடை- ஆபரணங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள், சேவகர்கள், பணிப்பெண்கள், தொண்டர்கள் எனப் பலவற்றை பணயம் வைத்து இழக்கிறான் தருமன். கடைசியில் பணயம் வைக்க ஏதுமில்லாத நிலையில், 'நா டிழக்க வில்லை, -தருமா!நாட்டை வைத்தி'டென்றான்’ சகுனி.
பாஞ்சாலி சபதம் – 1.2.9
சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...
பாஞ்சாலி சபதம்- 1.2.8
சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம், ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.
பாஞ்சாலி சபதம் – 1.2.7
தோலுக்காக பசுவினைக் கொல்வாருண்டோ? சூது அத்தகையதுதான் என்கிறான் தருமன். அவனுள்ளம் இது பீடன்று என மறுக்கிறது. அறநூலோர் வெறுக்கும் சூதினை நெஞ்சிலிருந்து நீக்குக என்று மாமன் சகுனியிடம் மன்றாடுகிறான் தருமன்...
பாஞ்சாலி சபதம் – 1.2.6
வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம்- 1.2.5
சூதாட அழைத்த சகுனிக்கு, ‘அது அறமன்று’ என தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...
பாஞ்சாலி சபதம் – 1.2.4
அஸ்தினாபுர அரசவைக்கு பாண்டவர் வந்து அமர்ந்ததும், கவறாட்டத்தில் இணையற்ற புகழுடையவனான சகுனி தருமனை சூதாட்டத்துக்கு அழைக்கிறான். வில்லுறு போரில் வென்றவர்களான நீங்கள் வல்லுறு சூதுப்போரிலும் வெல்ல வேண்டும் என்று சகுனி அழைப்பதாக மகாகவி பாரதி கவிதை புனைகிறார்...
பாஞ்சாலி சபதம்- 1.2.3
மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...